அந்த செய்தி இதுதான்“கப்பலை மறைய வைக்கும் முக்கோணம்”
அந்தச் செய்தி ”பர்முடா ட்ரையாங்கிள்” எனும் முக்கோண நிலப்பகுதியைப் பற்றியது.
யுனைடட் ஸ்டேட்ஸின் கிழக்குப் பகுதியில், ஃப்ளோரிடா, பர்முடா மற்றும் ப்வொர்தோ ரிகோ ஆகியவற்றின் இடையே அமைந்திருக்கிறது, அதிபயங்கரமான பயண அனுபவங்களை தரக் கூடிய இந்தப் பகுதி.
பொதுவாய் போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதி தான் இது. இருந்தும் இதன் வழியே பயணம் செய்த சில கலங்கள் தடயம் எதுவுமின்றி காணாமல் போயிருக்கின்றன.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்களையும், விமானங்களையும் அதனுள் இருந்த மக்களுடன் சேர்ந்து ஏப்பம் விட்டிருக்கிறது இது. திறமையான விமானிகளும் கப்பலோட்டிகளும் கூட மறைந்தவர்களுள் அடக்கம்.
சரி, அந்த கலங்கள் தொலைவதற்கு முன் என்ன நடந்தது?