Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

டவுன் பஸ்




பல நாட்களாகவே இந்த அனுபவத்தைப் பதிவிடனும்
என்றிருந்தேன்,காலம் கிடைக்காத பணிதான் காரணம்.(வெட்டியாய் இருப்பதற்கு
இவ்வளவு பில்டப்னு சொல்றது கேக்குது).
நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

பேருந்தில் பயணம் செல்வது என்பது ஒரு இனிமையான நிகழ்வுதான்.அதுவும் ஜன்னலோர
இருக்கையில் அமர்ந்து பயணிப்பது ,விவரிக்க முடியாத ஒரு இன்பத்தைத் தரும்.மரங்களும்,கரண்ட் கம்பங்களும் நம்மை விட்டு வேகமாய் விலகி செல்லும்.

நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில், நகரப் பேருந்துகள்தான் வரும் .நான் வசிக்கும்
கிராமத்திற்குபேருந்து வசதி கிடையாது.அருகிலுள்ள ஊருக்குத்தான் ஓரிரு நகரப்பேருந்துகள்
மட்டுமே வந்து செல்லும்.அது ஒரு கிராமத்துப் பேருந்து என்றுதான் சொல்லவேண்டும்.

எங்களூரிலிருந்து சுமார் 2கி.மீ. நடந்து சென்றுதான் அருகிலுள்ள ஊரில் பஸ் பிடித்துச் செல்லவேண்டும்,.
அதுவும் அந்தப் பேருந்து வரும் நேரத்தைவைத்துத் தான் மணி இவ்வளவு என்று
பிள்ளையார் மரத்தடி பெருசுக கணக்கிட்டுக் கொள்வார்கள்.

மதிய நேரம் தேர்வு எழுதச்செல்லும் நாட்களில் பஸ்ஸ்டாப்பை அடையும் முன்னரே பஸ்
வந்து நின்று கொண்டிருக்கும்.
ஓட்டுனரும்,நடத்துனரும் பிள்ளையார் கோவிலினுள் உட்கார்ந்துசாப்பிட்டுவிட்டு
செய்த்திதாள் படித்துக் கொண்டிருப்பார்கள்.அதற்குள் வரவேண்டியவர்கள்
வந்துவிட பேருந்தும் புகையைக் கக்கிகொண்டு புறப்படும்.

சீட்களில் பேர்
எழுதுவதும்,சீட்டில் இடம் பாகம் பிரித்துக் கொள்வதும்,......
இப்படி பல நிகழ்வுகளும் அந்த பேருந்தில் நிகழும்...
அந்தப் பேருந்திற்கு மட்டும் பேசும் ஆற்றல் இருப்பின் கதைகளே இல்லை ,என்று சொல்லும் சினிமாக்காரர்களுக்குப் பல கதைகள் கிடைத்திருக்கும்.

பிறகு நாட்களும் நகர பள்ளிப்படிப்பும் முடிந்து,பணிகளும் கிடைத்து
நண்பர்கள் பலரும் பல திசைகளிலும் சிதற,பேருந்துப்பயணமும் போவதில்லை.
இப்பொழுதெல்லாம் பேருந்துப்பயணம் போவதும் மஃப்சல் பேருந்துகள்,ஆதலால்
டவுன் பஸ்ஸின் பயண சுகமும் கிடைப்பதில்லை.
இரு சக்கர வாகனமும்,கார்களும் தான் நம் பயணிப்பது என்றாகிவிட்டது,.
பள்ளிமாணவர்களும்,பயணிகளும் பலர் வரலாம்.
ஆனால் பேருந்துமட்டும் இன்னும் பல சுவாரஸ்யங்களை தன்னகத்தே கொண்டு
மெதுவாய் அந்த கிராமத்துச் சாலை வழியே ஊர்ந்து செல்கிறது.

நம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துகிறேன் என்ற பேர்வழியில் வெட்டிக் கெளரவத்துக்காக
பைக்கும்,காரும் வாங்கி ஓட்டிக்கொண்டிருக்கும் அதே வேளையில்,
அந்த நகரப் பேருந்தும் கரடுமுரடான சாலை வழியே ஓடிகொண்டிருக்கிறது.


பணிகள் காரணமாய் நம் சந்தோஷங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த மாதிரி சின்ன சின்ன நிகழ்வுகளும் இன்றைய நோய்வாய்ப்பட்ட
உலகத்தில் ,ஒரு மருந்துதான்.

மீண்டும் அந்த பேருந்தில் பயணம் செய்யனும்.ம்ஹூம்,எப்பத்தான்னு தெரியல.



4 comments:

  1. நினைவுகள் அருமை .remove the word verification

    ReplyDelete
  2. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
    உங்களின் அனுபங்களையும் பகிருங்கள்.

    ReplyDelete
  3. arumaiyana pathivu nanbarey

    ReplyDelete

Animated Social Gadget - Blogger And Wordpress Tips