Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

எது என் குதிரை..?

குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.
சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".
அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார்.


கத்ரீனா எங்கே?-க்ரவுனுக்கு அண்டர்,



தொலைக்காட்சிகளில் இப்பொழுதெல்லாம் விளம்பரங்களின் ஆக்கிரமிப்புதான்.
10 நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரங்கள்தான்.சரி இருந்துட்டுப் போகட்டும்.

இதைவிடக் காமெடி தொலைபேசி வழி நேரடி ஒளிபரப்பில் நம்மாளுக அரைமணி
நேரம் காத்திருந்து ,சரி லைன் கெடச்சு ”ஹலோ!நான் இன்னார் பேசறேன்.”
அப்படீன்னு சொல்லி முடிப்பதற்குள் அவளும் தங்கிலீஸ்ல,
“ஹலோ!யார் பேசறீங்க,சரியா ”கேக்கலை,உங்க டி.வி. வால்யூமக் கம்மி
பண்ணுங்க!”,இது தொகுப்பாளினி.
நம்மாளும் அசடு வழிஞ்சுட்டே ”நாந்தான் பேசறேன்,நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க,உங்க
வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு”அப்படீங்குவார்.
அவ என்னமோ தெருவுல போற பன்னிக்குட்டிய சொன்னமாதிரி


மங்குனி அமைச்சர்?



1948 வாக்கில் நடந்த சம்பவம் இது:

ஒரு முறை ரயில்வே இலாகாவில் சரக்கு வேன்களுக்கு பற்றாக்குறை நிலவியது.
தகுதி அடிப்படையில் முன்னுரிமை வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்தது.
ஒரு தனியார் நிறுவனம் 50 வேன்களுக்கு ஒப்புதல் கோரியது.
ஆனால் அதில் ஒரு சிக்கல்,அது 50 வேன்களுக்கு ஒரு வேனுக்கு
ரூ 1000/- வீதம் 50 ஆயிரம் தர வேண்டும்.

அந்த நிறுவனமும் லஞ்சப் பணத்தைக் கொடுக்க ஒப்புக் கொண்டு முன்பணமாக ரூ 22 ஆயிரம் அமைச்சருக்கு கொடுத்தது.
கோப்பில் அமைச்சரும் "Approved" என்று எழுதிக் கையொப்பமிட்டார்.
கையெழுத்தானதை அறிந்த அந்நிறுவனம் மீதிப்பணத்தை தராமல் போக்குக் காட்டியது.
இதையறிந்த நம் அமைச்சர் சும்மா விடுவாரா?


சைலென்ஸ் ப்ளீஸ்!



ஒரு முறை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் டாக்ஸிபிடித்து ஏறினார்கள் இரண்டு இளைஞர்கள்.டாக்ஸி ட்ரைவரோ வயதான ஒரு சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும்
இளைஞர்களுக்குக் கிண்டல் செய்யும் எண்ணம் வந்தது.அவர்கள் கேட்ட,படித்த சர்தார்ஜிகளை கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன.
அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக நிறைய சர்தார்ஜி ஜோக்குகளை வரும் வழியில் சொல்லிக்கொண்டே வந்தார்கள்.

ஆனால் சர்தார்ஜி ட்ரைவரோ ஒரு வார்த்தை கூடப் பதில் பேசவில்லை.
சில மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் இறங்கும் இடம் வந்தது.
அதற்குள் சர்தார்ஜியை ஏகப்பட்ட கிண்டல் அடித்துவிட்டனர் அந்த இளைஞர்கள்.

மீட்டரைப் பார்த்துக் காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி ,இளைஞர்களிடம், இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து,”தம்பி,நீங்க ரெண்டு பேரும் எங்களை நிறையக் கிண்டல் செய்தீங்க!,பரவாயில்லை, ஆனா எனக்காக ஒரே ஒரு காரியம் மட்டும் பண்ணுங்க!,இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பார்க்குற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்குப் போடுங்க ,,உங்களுக்குப் புண்ணியமாப்போகும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் சர்தார்ஜி.

அந்த இரண்டு பேருக்கும் ஒன்றும் புரியவில்லை,அவர்கள் அந்த நாணயங்களோடு செல்லும் இடங்களில் எல்லாம் பார்த்தார்கள்.
ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரர்களையும் பார்க்க முடியவில்லை,

அவர்களும் டெல்லியிலிருந்து கிளம்பும் நாள் வந்தது.
ரயில் நிலைய கார் ஸ்டேண்டில் அந்த சர்தார்ஜியைச் சந்தித்தனர்.
அந்த சர்தார்ஜி இளைஞர்களிடம் “என்ன தம்பி ! அந்த அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்குப் பிச்சை போட்டீங்களா?”என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் “இல்லை,ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரர்களையும் எங்களால் பார்க்க முடியவில்லை”என்றனர்.

அந்த சர்தார்ஜி அவர்களிடம் “ அதான் தம்பி சர்தார்ஜிங்க! உலகம் முழுக்க எங்களைக் கிண்டல் செய்றாங்க!,ஆனா நாங்க அதெல்லாம் பொருட்படுத்தறதேயில்ல,
எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் உழைப்பு மட்டுந்தான்.ரோட்டோரக் கடை வைப்போம்,லாரி ஓட்டுவோம்,மூட்டை தூக்குவோம்,
ஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம்,டெல்லியில ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரனையும் பார்க்க முடியாது” என்றார் சர்தார்ஜி,
அந்த இரண்டு இளைஞர்களும் அவர்களின் செயலுக்கு வெட்கித் தலை குனிந்தனர். பின் மன்னிப்பு கேட்டு விட்டு பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.



அடுத்தவரைக் கிண்டல் செய்வது தவறான ஒரு செயல்,முடிந்தவரை அடுத்தவர்களின் மனம் நோகாமல் இன்வார்த்தைகளைப் பேசுவோம்.
அடுத்தவர்களின் ஏளனப் பேச்சைக் கேட்காமல்,நம் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அந்த காரியத்தை செய்தால் நிச்சயம் வெற்றிதான்.
அடுத்தவர்கள் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி.



உக்காந்து யோசிப்பாங்களோ?



ஒருநாள், மிஸ்டர்.மொக்கை குளக்கரையில் அமர்ந்திருந்தார்.. குளத்தினுள்
செங்கற்களைத் தூக்கிப்போட்டுவிட்டு அது ஏற்படுத்தும் அலைகளை
ஆழக்கவனித்தவாறு
சிந்தித்துக்கொண்டிருந்தார்.
அவ்வழியே போன ஒருவர் இதுகுறித்து விசாரிக்க.. மொக்கையார் மொழிந்தார்..
புரட்சிகரமான ஆராய்ச்சி முயற்சியில் இருக்கிறேன்..
புரட்சிகரமான ஆராய்ச்சியா..? அடடே.. சபாஷ்..! அப்படியென்ன ஆராய்ச்சி
அது..?
நான் செவ்வக வடிவமான கற்களை குளத்தினுள் எறிகிறேன்.. ஆனால் அது வட்ட
வடிவமான
அலைகளை ஏற்படுத்துகிறதே.. எப்படி..? இதுகுறித்துதான் ஆராய்கிறேன்..!!!
_____________________________________________________*
*_________________*
*இந்தாப்பா ராப்பிச்சை.. ரெண்டு நாளா வீட்டுக்காரர் ஊர்லே இல்ல. ரசம்தான்
வச்சேன்.. வாங்கிட்டு போறியா..?
மவராசன் சமைச்சது இல்லியா.. சரி போடு தாயி.. போற உசுரு எப்படிப் போனா என்ன..?*
*_________________*
*ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்..
அப்போது " அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து
வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில்
ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..
மற்றொரு நாள்.. பேர்ந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து
வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது இவன்
சென்றிருக்கவேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..
மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், யார் என்னை ஒவ்வொருமுறையும்
காப்பாற்றுவது..?" என நினைத்தான்..


சிரிப்பு வருது


இங்கே நாம் பார்க்கப் போறது கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....


Animated Social Gadget - Blogger And Wordpress Tips