Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

மரங்கள்-நம் மருத்துவர்கள்

இனி வரும் காலங்களில் ஒவ்வொரு மரங்களின் தன்மை,மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.முதலாவதாய் வருவது அரச மரம்தான்.
”அரசு இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது நம் முன்னோர் மொழி.அரசமரத்தின் உதிர்ந்த இலைகளைக் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் விளைச்சல் எடுக்கலாம்.ஒரு வருடத்திற்கு 1 டன் முதல் 4 டன் இலைகளை உதிர்க்கும் இந்த அரச மரம்,மழை மேகங்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை.மேலும் அதிகளவு ஆக்ஸிஜன் வாயுவை தரும் மரமும் இதுவே
இதனால்தான் நம் முன்னோர்கள் இதனை கோவில்களில் நட்டு,108 தடவை சுற்றி வரச் செய்தார்கள்.அப்படி சுற்றி வரும்போது கார்பன் -டை -ஆக்ஸைடை அதிகளவு  உட்கிரகித்து கொண்டு,உடம்புக்குத் தேவையான பிராண வாயுவை நமக்கு அளிக்கிறது.
புத்தருக்கு ஞானம் அளித்த இந்த அரச எனும் போதி மரம்,விசுவாமித்திர முனிவருக்கும் காயத்ரீ ஞானம் பிறந்தது.கி,மு,288 காலங்களில் அசோகர் ஸ்ரீலங்கா மன்னருக்கு புத்த மதத்தின் பரிசாய் அனுப்பியிருக்கிறார்.இதனால் அரசமரத்தடியில் புத்ததுறவிகள் கூடும் மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
காந்திஜியும்,நேருவும் அரச மரங்களை நட்டனர்,.இன்னும் கிராமங்களில் மக்கள் கூடும் சந்தைகளும்,விசேடங்களும் அரச மரத்தடியில்தான்.கிராமங்களில் அரச மரம் ஆணாகவும்,வேம்பு பெண்ணாகவும் சித்தரித்து திருமணம் செய்விப்பார்கள்.குழந்தை பேறு உண்டாக்கும் மருந்துகள்,சுற்றி வரும்போது ஏற்படும் வேதியல் மாற்றங்களால்,பிணி நீங்குதல்,மூல நோயை குணப்படுத்துதல்,என்று இதன் மருத்துவகுணங்கள் ஏராளம்.




IPL வருக! ஈழம் சாக!







இந்த வருட ipl வெகு விமரிசையாக ஆரம்பித்துவிட்டது.


நாட்டில் இருந்த எல்லா பிரச்சினைகளும் இதனால் தீர்ந்துவிட்டது,


எப்படியென்றால்

ஈழத்துக்காக மாணவர் போராட்டம் கைவிடப்பட்டது,

ஸ்டெர்லைட் ஆலை விவகாரப் போராட்டமும் கைவிடப்பட்டது,.



மகாராஷ்ட்ராவில் எவ்வளவு பஞ்சம் இருந்தாலும் ,கிரிக்கெட் மைதானத்திற்கு தண்ணீர் கொடுத்தே தீர்வார்கள்.!

இதனால் வருமானமும் கணிசமாகக் கிடைக்கும்.


இது ”Indian premier league” என்பது சந்தேகமாக இருக்கிறது.

”இலங்கை,ஆஸ்திரேலியா ப்ரீமியர் லீக்” என்று பெயர் மாற்றியிருக்கலாம்.


சோனியா என்னும் அரக்கி,கருணா எனும் எட்டப்ப துரோகி



சேனல் 4 ஆல் வெளியிடப்பட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் காணொளி பற்றி
என்ன சொல்ல?வார்த்தைகள் வரவில்லை,எழுதுவதற்கு. இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட போர்க்குற்ற காணொளி இதைவிடக் கொடுமையானது.

இதன் ஆரம்பம் எங்கே ஆரம்பித்தது,?

விடுதலைப்புலிகள் இயக்கம் 1975 ,மே 5 ஆம் நாள் தொடங்கப்பட்டது.இலங்கை விடுதலைக்குப் பிறகு மொழி,பல்கலைகழக இட ஒதுக்கீடு,தமிழர் பகுதியில் அரசுக் குடியேற்றங்கள் போன்ற காரணங்களால் தமிழர்களுக்கும்,சிங்களவர்களுக்கும் இடையே பிரச்சினை உருவெடுத்தது.
இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களை கவர்ந்து வந்தது. தொடக்கத்தில் இலங்கை காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் மீது சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வந்தனர்
.
1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் ஆல்பிரெட் துரையப்பா சுட்டுக் கொலை செய்யப்பட்டது புலிகளால் செய்யப்பட்ட முக்கிய தாக்குதலாக கொள்ளப்படுகிறது.பின் 1984 ல் சிதறி இருந்த இயக்கமாக இருந்த தமிழர் இயக்கங்கள் ஒன்றானது.

இந்திய ராணுவம் மூக்கை நுழைத்தது:

தமிழ்நாட்டில் ஈழத்திற்கு ஆதரவு பெருகியதால் இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்தில் உணவுப்பொட்டலங்களை வான்வழி வீசியதன் மூலம் இலங்கையின் உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒன்றிணைந்தனர் இரு நாட்டு ராணுவத்தினரும். 1987 ல் நடந்த ஒப்பந்தத்தின்படி ஈழப்போராளிகள் ஆயுதங்களை விட்டு சரணடைய இந்திய இலங்கை கூட்டுப் படைகள் அறிவித்தன.
ஆனால் போராளிகள் அதற்கு படியாமல், அக்டோபர் 8 ல் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலை செய்யக் காரணமும் இந்த ராணுவத்தினரின் அத்துமீறலால்தான்.
இதன்பிறகு பல தாக்குதல்கள் நடைபெற்று ராணுவத்தினரும்,புலிகளும் ப்ல்லாயிரக்கணக்கானோர் மாண்டு போயினர்.

2005 தேர்தல் .இலங்கையின் வடகிழக்கில் புலிகளால் தேர்தல் புறக்கணிக்கப்பட்டதால் கொடுங்கோலன் ராஜபக்‌ஷே சிறிதளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபராய் பொறுப்பேற்றார்,.புலிகள்
தேர்தலைப் புறக்கணித்ததால் தான் ராஜபக்‌ஷேவால் வெற்றி பெற முடிந்தது.தன் தலையில் தானே மண்ணை வாரித் தூற்றிக்கொண்டனர் புலிகள்.

இடைப்பட்ட காலங்களில் புலிகளின் சிறு சிறு தவறுகளால் வந்த வினைகள்தான் சேனல் 4 ன் இந்த வீடியோக் காட்சிகள்.
கருணா எனும் இந்த எட்டப்பன் புலிகளின் இயக்கத்திலிருந்து பிரிந்து


Animated Social Gadget - Blogger And Wordpress Tips