Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

மரங்கள்-நம் மருத்துவர்கள்

இனி வரும் காலங்களில் ஒவ்வொரு மரங்களின் தன்மை,மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.முதலாவதாய் வருவது அரச மரம்தான்.
”அரசு இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது நம் முன்னோர் மொழி.அரசமரத்தின் உதிர்ந்த இலைகளைக் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் விளைச்சல் எடுக்கலாம்.ஒரு வருடத்திற்கு 1 டன் முதல் 4 டன் இலைகளை உதிர்க்கும் இந்த அரச மரம்,மழை மேகங்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை.மேலும் அதிகளவு ஆக்ஸிஜன் வாயுவை தரும் மரமும் இதுவே
இதனால்தான் நம் முன்னோர்கள் இதனை கோவில்களில் நட்டு,108 தடவை சுற்றி வரச் செய்தார்கள்.அப்படி சுற்றி வரும்போது கார்பன் -டை -ஆக்ஸைடை அதிகளவு  உட்கிரகித்து கொண்டு,உடம்புக்குத் தேவையான பிராண வாயுவை நமக்கு அளிக்கிறது.
புத்தருக்கு ஞானம் அளித்த இந்த அரச எனும் போதி மரம்,விசுவாமித்திர முனிவருக்கும் காயத்ரீ ஞானம் பிறந்தது.கி,மு,288 காலங்களில் அசோகர் ஸ்ரீலங்கா மன்னருக்கு புத்த மதத்தின் பரிசாய் அனுப்பியிருக்கிறார்.இதனால் அரசமரத்தடியில் புத்ததுறவிகள் கூடும் மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
காந்திஜியும்,நேருவும் அரச மரங்களை நட்டனர்,.இன்னும் கிராமங்களில் மக்கள் கூடும் சந்தைகளும்,விசேடங்களும் அரச மரத்தடியில்தான்.கிராமங்களில் அரச மரம் ஆணாகவும்,வேம்பு பெண்ணாகவும் சித்தரித்து திருமணம் செய்விப்பார்கள்.குழந்தை பேறு உண்டாக்கும் மருந்துகள்,சுற்றி வரும்போது ஏற்படும் வேதியல் மாற்றங்களால்,பிணி நீங்குதல்,மூல நோயை குணப்படுத்துதல்,என்று இதன் மருத்துவகுணங்கள் ஏராளம்.




வெங்காயத்தின் மகிமை.



  • தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.
  • சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிடச் செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும்.
  • காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து லேசாகச் சுட வைத்து காதில் விட்டால் வலி, குத்தல் நிற்கும்.
  • அஜீரணத்தால் வாந்தி, பேதி அடிக்கடி மணிக்கு ஒரு தடவை உண்டானால் வெங்காயச்சாறு அரை அவுன்ஸ் வீதம் குளிர்ந்த நீரில் கலந்து அடிக்கடி கொடுத்துவர மப்பு குறைந்து ஜீரண சக்தி உண்டாகி வாந்தி, பேதி நிற்கும்.
  • விஷப்பூச்சிகளால் உண்டான வாந்திபேதியில் ஆரம்பத்திலேயே வெங்காயச்சாறு ஒவ்வொரு அவுன்ஸும், 2, 3 சிட்டிகை பெருங்காயத் தூளும் கலந்து அரை மணிக்கு ஒரு தடவை கொடுக்க குணமாகும். இந்த நிலையில் கை, கால் குளிர்ந்து ஜில்லிப்புடன் காணப்பட்டால் வெங்காயத்தின் சாற்றையே பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் தடவி சூடு வரும்படி தேய்க்க வேண்டும்.
  • தோல் நீக்கிய வெங்காயத்தைச் சிறு துண்டாக நறுக்கி குளிர்ந்த நீரில் நான்கு அல்லது ஐந்து தடவை அலம்பி தயிர் சேர்த்து தினம் மூன்று முறை உட்கொள்ள வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
  • மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்போது வெங்காயத்தைக் கசக்கி முகர்ந்தால் உடன் ரத்தக்கசிவு நிற்கும். வெங்காயச்சாறு அல்லது வெங்காயச்சாறும் நல்லெண்ணெயும் சம அளவு கலக்கி அதன் சில துளிகளை யாவது வலிக்கும் சொத்தைப் பற்களில் வைத்தால் சிறிது நேரத்தில் பூச்சிகளும் இறந்து வலியும் நின்றுவிடும்.
  • வெங்காயச்சாறு அரை அவுன்ஸும், சுத்தமான தேன் கால் அவுன்ஸும் கலந்து காலை, மாலை 2 வேளை வீதம் 25 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு வீர்யம் அதிகரிக்கும்.


Animated Social Gadget - Blogger And Wordpress Tips