Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

நிஞ்சா -நிச்சயம் மாஞ்சாதான்



ஜப்பானிய வரலாற்றில், நிஞ்சா (சிநோபி) என்பவர்கள் ஆட்கொலை, உளவு மற்றும் மரபுசாரா போர்க்கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்.






ஜப்பானியக் கலாசாரத்தில், நிஞ்சாக்கள் அபாயகரமான நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் பயிற்சி அளிக்கப்பட்டனர். அவர்களுடைய தோற்றம் சர்ச்சைக்கு உட்பட்டதாகவே உள்ளது.
இந்த கருத்து பற்றி நமக்கு யோசனை வேண்டாம் .

உலக அளவில் கவாஸாகி விற்பனை செய்து வரும் நிஞ்சா வரிசை ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு நிஞ்சா வரிசை பைக்குகளில் அவ்வப்போது மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், நிஞ்சா 650ஆர் பைக்கில் சில மாற்றங்களை செய்துள்ளது பஜாஜ் கீழ் செயல்படும் ஜப்பானிய நிறுவனமான கவாஸாகி. கூர்மையான முன்பக்க வடிவமைப்பு, புதிய பெட்ரோல் டேங்க், புதிய ஃபோம் இருக்கை மற்றும் பின்புற டேஞ்சர் விளக்குகள் 



கொடாக் நிறுவனம் திவால்!

ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே, கையில் பிடித்து புகைப்படும் எடுக்கும் கருவியை பெருவாரியான மக்களிடம் எடுத்துச் சென்ற பெருமை கொடாக் நிறுவனத்துக்கு உண்டு.

கொடாக்கின் பெருமைகள்:


1880 ஆம் ஆண்டுகளில் ஜார்ஜ் ஈஸ்ட்மேன் அவர்களால் கொடாக் நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, இருபதாம் நூற்றாண்டில் மிகவும் அறியப்பட்ட வர்த்தகப் பெயர்களில் ஒன்றாக அது திகழ்ந்தது.


கொடாக் தருணங்கள் என்று கூறப்பட்ட பல லட்சம்
குடும்ப புகைப்படங்கள் உட்பட பல சரித்திர முக்கியத்துவம்
வாய்ந்த படங்கள் கொடாக் கேமராவில் எடுக்கப்பட்டுள்ளன.

மனிதன் நிலவில் முதலில் கால்பதித்த தருணத்தை பதிவு செய்ய நீல் ஆம்ஸ்ட்ராங் கொடாக் கேமராவைத்தான் பயன்படுத்தினார். 1892 ஆம் ஆண்டு ஈஸ்ட்மேன் கொடாக் எனும் நிறுவனம் உருவான பிறகு 1970 கள் வரை அமெரிக்க புகைப்பட சந்தையில் 90 சதவீதம் அந்த நிறுவனத்திடம் இருந்தது.

வீழ்ச்சிக்குக் காரணம்:


ஆனால் உலகளவில் புகைப்பட தொழில்நுட்பம் டிஜிட்டலுக்கு மாறிய பிறகு, அந்த மாற்றத்தை மிக மெதுவாகத்தான் கொடாக் ஏற்றுக் கொண்டது, அதுவேஅதன் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்ப மாறுதலை அணைத்துக்கொள்வதில் அந்த நிறுவனம் மிகத் தாமதமாக செயல்பட்டது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளில் கொடாக் நிறுவனத்தின் மதிப்பு 35 பில்லியன் டாலர்களிலிருந்து 150 மில்லியன் டாலர்களுக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்தது.
நிர்வாகத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை கொடாக் எடுத்துவரும் வேளையில், நிறுவனம் நிலைகுலையாமல் இருக்கும் நோக்கில் ஒரு பில்லியன் டாலர்கள் கடனை கொடாக் திரட்டியுள்ளது.
அண்மைய காலங்களில் தம்மிடமுள்ள காப்புரிமையின் மூலம் பயனடையும் செயல்பாடுகளிலும் கொடாக் இறங்கியது. அது தொடர்பில் ஆப்பிள், எச் டி சி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் மீது வழக்கும் தொடுத்தது.
தற்போது திவாலாவதிலிருந்து தமக்கு பாதுகாப்பு கிடைக்குமானால், 2013 ஆம் ஆண்டுக்குள், நிதிநெருக்கடியில் இருந்து மீண்டு தனது தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என கொடாக் நம்புகிறது.
தனது இலாபங்கள்
வீழ்ச்சியடைவதை தடுக்கும் நோக்கில், கடந்த சில காலமாக கேமரா தொழிலிலிருந்து கொடாக் விலகி, கம்ப்யூட்டர் பிரிண்டர்களில் கவனம் செலுத்தியது.

இந்த மாதத்தில் முற்பகுதியில் கொடாக் நிறுவனத்தின் பங்குகள் குறைந்தது ஒரு டாலருக்கு மேலான நிலையை எட்டாவிட்டால், அந்த நிறுவனத்தின் பங்குகள் தமது சந்தையிலிருந்து அகற்றப்படும் என்று நியூயார்க் பங்குச் சந்தை அறிவித்திருந்தது.

1980 களில் கொடாக் நிறுவனம் உச்சத்தில் இருந்த போது உலகளவில் அதில் 1,45,000 பேர் பணியில் இருந்தார்கள். ஆனால் தற்போது அதில் 19,000 ஊழியர்களே இருக்கும் நிலையில், அவர்களின் பலர் இந்த திவால் நிலையினால் வேலை இழக்க நேரிடும்.

உலகளவில் இருபதாம் நூற்றாண்டில் அனைவரின் வாழ்க்கையிலும்
மறக்க முடியாத நினைவுகளை பாதுகாத்து வைத்ததில் கொடாக்குக்கு ஒரு பங்கு
ள்ளது, ஏனென்றால் அந்த நிறுவனத்திடம்தான் அந்தப் பணி பெரும்பாலானவர்களால் ஒப்ப
டைக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டுகிறார் டொடரண்டோவிலுள்ள ரயர்ஸன்
பல்கலைகழகத்தில் புகைப்படத்துறை பேராசிரியராக இருக்கும் ராபர் பர்லி.


ஏற்கனவே சிட்டிகுரூப் நிறுவனத்திடமிருந்து 950 மில்லியன் டாலர்கள் கடனை கொடாக் ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்காவின் பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான கொடாக் திவாலாவதிலிருந்து சட்டரீதியான பாதுகாப்பை கோரியுள்ளது.
(source:america daily)


கூகுள் தரும் புதிய வசதி


இந்திய இசை ரசிகர்களுக்காக GOOGLE புதிய இசைக்கான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், பல்வேறு தேடல்களை எளிதாக்கிய கூகுள் இந்த முறை நீங்கள் விரும்பும் பாடல்களை எளிதாக தேடி கேட்டு மகிழ இசைக்கென தனியாக ஒரு தேடல் பொறியை வழங்குகிறது. தற்சமயம் இந்திப் பாடல்களை மட்டும் கேட்டு மகிழலாம். in.com,Saavn மற்றும் Saregamaஆகிய தளங்களுடன் இணைந்து இந்த சேவையினை வழங்குகிறது.


70 களில் வந்த திரைப்படங்களில் இருந்து இப்போதைய டெல்லிபெல்லி வரை இந்தி பாடல்கள் உள்ளது.தமிழில் மாவீரன்,ரோஜா,கர்ணன், உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே உள்ளன.தெலுங்கு படங்களும் ஒரு சில மட்டுமே உள்ளன.



இதற்கான காப்புரிமையின தனிப்பட்ட முறையிலும், பங்குதாரர்களின் மூலமாகவும் 1000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பெற்றுள்ளது. கூடுதலான சேவைகளை இன்னும் வழங்கவில்லை.. எனினும் எல்லாத்துறைகளிலும் கலக்கும் கூகுள் மேலதிகமாக புதுமைகளை இதிலும் அறிமுகப்படுத்தும் என நம்புவோம்.

இணையதள முகவரி: http://www.google.co.in/music/





Animated Social Gadget - Blogger And Wordpress Tips