இழந்துபோன இன்பங்கள்-பகுதி 1
தாஜ்மஹாலின் இருண்ட பக்கங்கள்-வெளிவராத மர்மங்கள்.
ஷாஜஹானின் ஆட்சியின் கடைசிகாலகட்டம் அது.ஔரங்கசீப் ஆட்சி அரங்கேறியது.
தன் தந்தையை சிறை வைத்தார் ஔரங்கசீப்.
ஆக்ரா கோட்டையில் எட்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்ட ஷாஜகானுக்கு மாற்று உடைகளும், எழுதும் உபகரணங்களும் மறுக்கப்பட்ட காலம்.அவர் அணிந்திருந்த ஆபரணங்களும் அகற்றப்பட்டன.
“பூனை இளைத்தால் எலிக்குக் கொண்டாட்டம்” என்னும் முதுமொழிக்கேற்ப ஷாஜகானை
காவலாளிகள் கூட மரியாதைக் குறைவாக நடந்து கொண்டனர். மகனான ஔரங்கசீப் மதித்தால்தானே காவலர்கள் மதிப்பதற்கு.

வெறுப்பின் உச்சகட்டத்திற்கு போன ஷாஜகானுக்கு பாலைவனச்சோலையாக இருந்தது தன் மகளான ஜஹனாராதான்.மகன் மதிக்காது போனாலும் தன் மகள் ஜஹனாராவாவது தமக்கு சிறையில் உதவியாய் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது ஷாஜகானுக்கு.
பெரும்பாலான பொழுதை தொலைவில் தெரியும் தன் காதல்மனைவியின் கல்லறையான தாஜ்மஹாலையே கண்ணிமைக்காமல் பார்த்து தன் நிலை எண்ணி கவலையுற்று,நோய்வாய்ப்பட்டார்.
புனித குர் ஆன் படிப்பதற்குமட்டுமே ஷாஜஹானுக்கு ஔரங்கசீப் அனுமதித்தார்.
(மகன் தந்தைக்கு ஆற்றும் செயல்).
அந்த நிலையிலும் தன் சகோதரியின் வேண்டுகோளுக்கிணங்கி ஔரங்கசீப் ,ஆளுயர கண்ணாடி ஒன்றை ஷாஜஹான் தாஜ்மஹாலை பார்க்கவசதியாக வைப்பதற்கு ஔரங்கசீப் அனுமதித்தார்.