Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
Showing posts with label சுற்றுலா. Show all posts
Showing posts with label சுற்றுலா. Show all posts

கோவை கொடீசியா-தோட்‌டக்கலை துறை கண்காட்சி

பல நாட்களுக்குப் பிறகு பதிவிடுவதில் மகிழ்ச்சி.இந்த முறை கோவை கொடீசியாவில் நடைபெற்ற தோட்‌டக்கலை துறை கண்காட்சி பற்றி பதிவிட இருக்கிறோம்.முகநூல் நண்பர் ஒருவர் கண்காட்சி பற்றி கேட்டிருந்தார்.தவிர்க்க இயலாத காரணத்தால் நாம் செல்ல இயலவில்லை.நம் நண்பர் குழு ஒன்று பார்வையிட்டு,நமக்காக புகைப்படம் எடுத்து வந்துள்ளனர்.இதோ உங்கள் பார்வைகளுக்கு.
பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட உருவங்கள் மனத்தை கவருவதாய் இருந்தன.




கப்பலை மறைய வைக்கும் முக்கோணம்


பல வருடங்களுக்கு முன் “பாக்யா” வார இதழைப் படித்துக்கொண்டிருந்த போது ஒரு செய்தி என்னை உற்றுநோக்க செய்தது.

அந்த செய்தி இதுதான்“கப்பலை மறைய வைக்கும் முக்கோணம்”
அந்தச் செய்தி ”பர்முடா ட்ரையாங்கிள்” எனும் முக்கோண நிலப்பகுதியைப் பற்றியது.

                               யுனைடட் ஸ்டேட்ஸின் கிழக்குப் பகுதியில், ஃப்ளோரிடா, பர்முடா மற்றும் ப்வொர்தோ ரிகோ ஆகியவற்றின் இடையே  அமைந்திருக்கிறது, அதிபயங்கரமான பயண அனுபவங்களை தரக் கூடிய இந்தப் பகுதி.

பொதுவாய் போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதி தான் இது. இருந்தும் இதன் வழியே பயணம் செய்த சில கலங்கள் தடயம் எதுவுமின்றி காணாமல் போயிருக்கின்றன.


இதுவரை  நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்களையும், விமானங்களையும் அதனுள் இருந்த மக்களுடன் சேர்ந்து  ஏப்பம் விட்டிருக்கிறது இது. திறமையான விமானிகளும் கப்பலோட்டிகளும் கூட மறைந்தவர்களுள் அடக்கம்.


சரி, அந்த கலங்கள் தொலைவதற்கு முன் என்ன நடந்தது?




வெள்ளியங்கிரி மலைப்பயணம்




கடந்த இரு வாரங்களுக்கு முன் பௌர்ணமி அன்று நானும், எனது சில நண்பர்களும் இரவில்
திடீரென வெள்ளியங்கிரி மலை செல்லலாம் என்று முடிவெடுத்தாயிற்று.
நாங்கள் முடிவெடுத்து முடிவதற்குள் மணி 8.30 ஆகிவிட்டது.(ஒரு வழியா முடிவுக்கு வந்துட்டாங்க).
“சரி கிளம்புவோம்” என்று பேருந்து நிலையம் செல்ல முற்பட்டபோதுதான் அந்த நேரத்தில் அங்கே பேருந்து இருக்காது என்று தோன்றியது.
பிறகு இரு சக்கர வாகனத்தில் செல்லலாம் என்று கிளம்பியாச்சு.ஏற்கனவே நமக்கெல்லாம் பைக் ரைடிங் போவதில் விருப்பம்.அடுத்து பெட்ரோல்,டயர்களின் நிலை,காற்று ஆகியவற்றை பரிசோதித்துவிட்டு எல்லோரும் கிளம்பினோம்.
போகும் வழியிலேயே சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்பி ஒரு வழியா உக்கடம் பைபாஸைத் தொட்டுவிட்டோம்.

அப்போது மணி 10 ஐத் தொட்டுவிட்டது.கோவை மக்களின் பரபரப்பு கொஞ்சம் குறைந்துவிட்டுப் போயிருந்தது.
உக்கடம் தாண்டி பேரூர் செல்லும் வழியில் காவல்துறையினர் சோதனைச் சாவடியில் காவலர்கள் இருவர் “குடி”மகன்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.நாங்க மொத்தம் மூன்று பேர் ஒரு வண்டியில் சென்றதால் ,ஒருவர் சோதனைச்சாவடிக்கு முன்னரே உள்ள உணவகத்தில் இறங்கி விட்டு,பின் இன்னோருவரை சோதனைச்சாவடி தாண்டி இறக்கிவிட்டுப் பின் மீண்டும் ,அந்த உணவகத்தில் உள்ளவரை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
யார் இறங்குவது என்று முடிவானபோது “நானே இறங்குகிறேன்” என்று இறங்கிக்கொண்டேன்.பின் அந்த உணவகத்தில் நின்றவாறு சோதனைசாவடியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
இப்படி செய்ததால்தான் காவலர்களிடமிருந்து தப்பித்தோம்(செஞ்சது தப்புத்தானுங்கோ),
அப்பவும் நல்ல டிப்டாப் ஆசாமி ஒருவர் காவலர்களிடம் போதையில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.பிறகு “drink and drive ” என்று புகார் எழுதி ரூ 500/- ஐ வசூல்செய்து தன் கடமையை செவ்வனே செய்துமுடித்தார்கள் அந்த இரு காவலர்களும்.


கட்டபொம்மன் கோட்டை



சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக தூத்துக்குடிக்கு 8 பேர் சென்றோம்.திருமணம் முடிந்து வரும் வழியில் எதேச்சையாகத்தான் கட்டபொம்மன் கோட்டை நுழைவாயிலைப் பார்த்தோம்.

பின் அங்கு சென்று வரலாம் என்று எல்லோரும் சென்றோம்.



  1. வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் நாம் ஐந்து வளைவுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். முதலில் தெரிவது ஊமைத்துரை நுழைவாயில்.

2. இதைக் கடந்து மேலும் சற்று தூரம் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இரண்டாவது நுழைவாயில் தென்படுகின்றது. இதற்குப் பெயர் வெள்ளையத்தேவர் நுழைவாயில்.

3. இதைக் கடந்து மேலும் சற்று தூரம் சென்ற பின்னர் நம்மை வரவேற்பது தானாபதிப் பிள்ளை தோரணவாயில்.

4. இதற்கு அடுத்தார் போல் சற்று தூரத்தில் அமைந்திருப்பது சுந்தரலிங்கம் தோரணவாயில்.

5. இதனைக் கடந்து மேலும் பயணித்துக் கொண்டிருக்கும் போது நம்மை வரவேற்பது வீரசக்கம்மாள் தோரணவாயில்.


இந்த ஐந்து தோரண நுழைவாயில்களையும் கடந்து செல்லும் போது சற்று தூரத்திலிருந்தே வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுக் கோட்டை தெரிகின்றது.

இவ்வளவு அழகாக ஒரு சிறு கோட்டை போல இந்த மண்டபம் இருக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.



வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்து தூக்கிலிட்ட பிறகு அவர் கட்டிய மாளிகை ஆங்கிலேய அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்பகுதி பிறகு வெறும் மணல் மேடாகக் கிடந்தது. இந்த இடத்திற்குப் பக்கத்தில் அந்த சண்டையின் போது இறந்து போன பன்னிரண்டு ஆங்கிலேய வீரர்களுக்கும் ஆங்கிலேய அரசாங்கத்தால் கல்லறை கட்டப்பட்டது. அதில் அந்த ஆங்கிலேய வீரர்களின் பெயர்கள் குறிப்புக்கள் ஆகியவை சேர்க்கப்பட்டு இப்பகுதி ஆங்கிலேயர்கள் காலத்திலேயே நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

போகும் வழியும் குண்டும் குழியுமாக உள்ளது.


கால தாமதம் ஆனதால் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்துக்குச் செல்ல முடியவில்லை.



இன்றைய நிலையில் குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.


மேலும் கூட்டம் குறைவாக இருப்பதால் ,இளஞ்ஜோடிகள் பணத்தை கொடுத்து

அதிக அளவில் வருகின்றனர்.

இதை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்..இல்லையெனில் ஒரு மாவீரன் கோட்டை லாட்ஜ் ஆக மாறிவிடும்...









Animated Social Gadget - Blogger And Wordpress Tips