Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

கண்ணதாசனின் ரகசியங்‌கள்


வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன.
நிலங்கள் வறண்ட பின்தான் பசுமையடைகின்றன.
மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.
இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான்.
அதுவும் வளர்வதாகவும், அமிழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான்.

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
முதற்கட்டம் வரவு என்றால், அடுத்தக் கட்டம் செலவு.
முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்தக்கட்டம் துன்பம்.
முதற்கட்டமே துன்பமென்றால், அடுத்த கட்டம் இன்பம் இறைவனது தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றன.



எது என் குதிரை..?

குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.
சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".
அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார்.


கோவை கொடீசியா-தோட்‌டக்கலை துறை கண்காட்சி

பல நாட்களுக்குப் பிறகு பதிவிடுவதில் மகிழ்ச்சி.இந்த முறை கோவை கொடீசியாவில் நடைபெற்ற தோட்‌டக்கலை துறை கண்காட்சி பற்றி பதிவிட இருக்கிறோம்.முகநூல் நண்பர் ஒருவர் கண்காட்சி பற்றி கேட்டிருந்தார்.தவிர்க்க இயலாத காரணத்தால் நாம் செல்ல இயலவில்லை.நம் நண்பர் குழு ஒன்று பார்வையிட்டு,நமக்காக புகைப்படம் எடுத்து வந்துள்ளனர்.இதோ உங்கள் பார்வைகளுக்கு.
பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட உருவங்கள் மனத்தை கவருவதாய் இருந்தன.




என்ன செய்யப்போகிறது இளைஞர் சமுதாயம் - கோ நம்மாழ்வார்


நன்றி : தினமலர்
(2011).

கிராமங்களைப் பற்றி பேசச் சொன்னால் பல் முளைக்கும் குழந்தை போல லயித்துச் சிரிக்கிறார் வேளான் ஞானி கோ.நம்மாழ்வார்.

“”எங்கள் கிராமத்து வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பி வழியும். சிறு வயதில் குட்டிக்கரணம் அடித்து குதூகலிப்போம் . வண்டிகளும், மாடுகளும் அதில்தான் இறங்கி ஏறும். பின் அங்கே பாலம் வந்தது.
கோடை காலத்தில் தண்ணீர் இல்லாத வெது மணலில் சடுகுடு ஆடினோம். இன்று வாய்க்காலில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை.
இருமருங்கிலும் நெல்லி, மா, நாவல் மரங்கள் இருந்தன. இன்று அவையெல்லாம் அருகிவிட்டன.
மாலை நேரங்களில் நிலா வெளிச்சத்தில் குழந்தைகள் ஓடியாடி விளையாடும். தாய் தகப்பனுடன் வீட்டின் திண்ணையில் அமர்ந்து குழந்தைகளின் சேட்டைகளைக் கண்டு ரசிப்பதோடு தங்களின் கஷ்ட நஷ்டங்களை அண்டை அயலாரோடு பகிர்ந்து, கூடி வாழ்ந்தார்கள்.

இன்பம் செழித்த மருத நிலமாகத் திகழ்ந்த மக்கள் வாழ்வு இன்று பாலையாகவே மாறிவிட்டது. இன்று ஏன் நினைவுகளின் நிழலைக்கூட அங்கு காணமுடிவதில்லை.



இழந்துபோன இன்பங்கள்-பகுதி 1

இன்றைய வெளிநாட்டு மோக வாழ்க்கையில், நாம் ஒரு இயந்திர வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நம் தமிழர்மரபுகள் பல மறக்கப்பட்டு விட்டன,ஏன் மறக்கடிக்கப்பட்டது என்றே சொல்லலாம்.
முந்தைய காலகட்டங்களில்  மக்கள் பலதுறைகளில் கைதேர்ந்தவர்களாய் இருந்தார்கள்.இப்போது இருக்கும் நாமோ ஒரு துறையினையே நல்ல முறையில் கற்று தேர்வதில்லை.அது போக நமக்கு அனுபவ அறிவும் போதவில்லை.






வீரப்பன் ஒரு ராபின் ஹூட்

வீரப்பன் 
இந்தப் பெயரைக் கேட்டால் யார் நடுங்குகிரார்களோ இல்லையோ அரசு அதிகாரிகள் நடுங்குவார்கள் .
சத்தி வனப்பகுதியைப் பொறுத்தவரை  வீரப்பன் ஒரு ராபின் ஹூட் மாதிரி .
கர்நாடகம்  வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதும் ,சுருட்டிக் கொண்ட தனது  வாலை
நம் காதுக்குள் விட்டு ஆட்டுகிறது .
வீரப்பனை எதிர்மறையாக பலர் உணர்ந்தாலும், வீரப்பன் வாழ்ந்த காட்டிற்கு அருகே இருக்கும் கிராம மக்கள் தங்கள் காவல் தெய்வமாகத்தான்  வீரப்பனைப்  பார்த்தார்கள்.
பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்களை முறையற்ற வகையில் களவாடி அதை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து வாழ்வு நடத்திய ஏழைகளின் பங்களான் எனப்படும் ராபின் ஹூட்டின்


சீனப் பெருஞ்சுவர் சேதம்


உலக அதிசயங்களின் பட்டியல்கள் புதிது, புதிதாக அவ்வப்போது வந்து கொண்டுதான் உள்ளன. ஆனாலும் என்றென்றும் உலக அதிசயமாக கருதப்படு வது சீன பெருஞ்சுவர்.



நிலவில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரே மனித படைப்பு என்ற பெருமையும் இதற்கு உண்டு. நாட்டின் பாதுகாப்புக்காக பிரம்மாண்ட மதில் சுவர் எழுப்புவது என்பது சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் ஐடியா. அவரது ஆட்சிக் காலத்தில்(கி.மு. 220-206) கட்டப்பட்டது.
இதன் சில பகுதிகள் மட்டுமே தற்போது சுவராக நீடிக்கிறது. அதன் பிறகு கி.மு. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16ம் நூற்றாண்டு வரை யில் பல்வேறு மன்னர்களின் காலக் கட்டத்தில் கட்டப்ப ட்டது. இடியும் நிலையில் இருக்கும் பகு திகளும் அவ்வப்போது புதுப்பிக் கப்பட்டு வந்தது.
இவ்வாறு கிழக்கே ஹெபேய் மாகாணம் ஷாங்ஹாய்குவானில் தொடங்கி மேற்கில் லோப்நுர் வரையில் பிரதான சுவர், கிளைச் சுவர் என சுமார் 8,850 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்டமாய் நீள்கிறது. மொத்த சுவரும் கற்கள், பாறைகளைக் கொண்டே அமைக்கப்பட்டதாக கருதப்பட்டு வந்தது. ஓக் மரத்தை யும் கல் போல பயன்படுத்தி சுவர் கட்டியிருப்பது தொல்பொருள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெருஞ்சுவர் கட்டிய மன்னன் 
இதுபற்றி லயோனிங் கலாசார நினைவுச் சின்னங்கள் அமைப்பு மற்றும் மேப்பிங் துறை அதிகாரி கள் கூறியதாவது:


கப்பலை மறைய வைக்கும் முக்கோணம்


பல வருடங்களுக்கு முன் “பாக்யா” வார இதழைப் படித்துக்கொண்டிருந்த போது ஒரு செய்தி என்னை உற்றுநோக்க செய்தது.

அந்த செய்தி இதுதான்“கப்பலை மறைய வைக்கும் முக்கோணம்”
அந்தச் செய்தி ”பர்முடா ட்ரையாங்கிள்” எனும் முக்கோண நிலப்பகுதியைப் பற்றியது.

                               யுனைடட் ஸ்டேட்ஸின் கிழக்குப் பகுதியில், ஃப்ளோரிடா, பர்முடா மற்றும் ப்வொர்தோ ரிகோ ஆகியவற்றின் இடையே  அமைந்திருக்கிறது, அதிபயங்கரமான பயண அனுபவங்களை தரக் கூடிய இந்தப் பகுதி.

பொதுவாய் போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதி தான் இது. இருந்தும் இதன் வழியே பயணம் செய்த சில கலங்கள் தடயம் எதுவுமின்றி காணாமல் போயிருக்கின்றன.


இதுவரை  நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்களையும், விமானங்களையும் அதனுள் இருந்த மக்களுடன் சேர்ந்து  ஏப்பம் விட்டிருக்கிறது இது. திறமையான விமானிகளும் கப்பலோட்டிகளும் கூட மறைந்தவர்களுள் அடக்கம்.


சரி, அந்த கலங்கள் தொலைவதற்கு முன் என்ன நடந்தது?




பிறர் பார்வையில் என்னைப் பார்க்கிறேன்

ஒரு போலியான வாழ்க்கை  எல்லோரிடதிலும் உள்ளது.அதைப் பற்றி 
முகத்தில் அணிந்திருக்கும் அறிவு ஜீவி முகமூடியைக் களைந்து விட்டு, எந்த வித போலித்தனமுமில்லாமல் அர்த்தங்களற்று பேசித்திரிய மனது விரும்புகின்றது.நகர வாழ்க்கையின் வெம்மை என்னை கொஞ்ச கொஞ்சமாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது! நின்று நிதானித்து கடந்த சில நாட்களாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று திரும்பிப் பார்த்தால் ஒன்று மட்டுமே புரிந்திருக்கின்றது. நான் வெறுமனே ஓடிக் கொண்டிருந்திருக்கின்றேன். இனிமேலும் வெறுமனே ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டும் என்று நகரம் எனக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றது. “மச்சான் நான் இப்போ மீட்டிங்ல இருக்கேண்டா அப்புறமா பேசறேன். சாரி” என்று சொல்லி விட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் மறுபடி வேலைகளுக்குள் மூழ்கி விட எனக்கு எளிதில் பழக்கப் பட்டு விட்டது. அன்றைய நாளின் மிகப்பெரிய சந்தோஷமாய் பயணித்த பேருந்தில் கூட்டமில்லாமலிருந்ததை சொல்லித் திரிந்து கொண்டிருக்கின்றேன்.யோசித்துப் பார்க்கையில் எல்லாமே அர்த்தமற்றதாய் தென்படுகின்றது. அலுவலகத்தினுள்ளே நுழையும் போதே ஒரு முகமூடி அணிந்து கொள்வது எல்லாருக்கும் அவசியமாகி விட்டது.. தன்னுடைய நடை, உடை, பேச்சு எல்லாவற்றிலுமே போலிப்பூச்சுக்களை தேடித் தேடி பூசிக் கொள்ளுகின்றோம். வேலைகளிற்கு நடுவில் ரிலாக்ஸ் செய்வதற்காக பேசும் பேச்சில் கூட நம்முடைய அறிவுத் திறமையை வெளிப்படுத்த தயார் செய்து கொண்டிருக்கின்றோம்.அமெரிக்கா, பில்கேட்ஸ், சேகுவேரா, மார்க்ஸ், ஈழத் தமிழர்கள், இந்து பேப்பர், ஷேக்ஸ்பியர் கவிதைகள், ஜாஸ் மியூசிக், மடோனா லேட்டஸ்ட் ஆல்பம் இவையனைத்தும் நம்முடைய அறிவை நிர்ணயிக்கும் அளவுகோல்களாகிப் போனது.பரந்து பட்டிருக்கும் கூட்டத்தில் இவை எல்லாவற்றையும்  பற்றிப் பேசத் தெரிந்தவன் “அறிவாளி” என்ற லேபிளை சுமப்பவனாய் மாறிப் போகின்றான்


என்ன விலை இந்த உயிர் ?

ஒரு வாரத்திற்கு முன் நடந்த சம்பவமிது.
மாலை 5.30 மணி இருக்கும்.சூரியனின் அந்தி நேர ஒளிக்கீற்றுகள்
மரங்களின் வழியே சாலையில் மின்னிக் கொண்டிருந்த்து.
சாலையில் நானும் ,எனது நண்பரும் இரு சக்கர வாகனத்தில் வந்து
கொண்டிருந்தோம்.
பேருந்துகளும்,கனரக வாகனங்களும்,இன்னும் சில எமனின் ஏஜண்ட்டுகளும்
எங்களை விலக்கிக் கொண்டு முந்திச் சென்றன.
எந்தவொரு வாகனமும் மிதவேகமாகச் சென்றிருக்காது.எல்லாமே
மிகவேகம்தான்.
எங்களை கடந்து சென்ற ஒரு மினி ஆட்டோ ,சாலையில் ஒரு எட்டுப் போட்டு சென்றது.
“ஒருவேளை R.T.O பாத்துட்டு இருப்பாரோ?,இவனுக்கு லைசென்ஸ் கொடுப்பதற்கு?என்று கமெண்ட் அடித்துக்கொண்டு வந்தோம்,நானும்,நண்பரும்,
அப்பொழுதுதான் ஒரு பூனைக்குட்டியொன்றை சாலையில் கண்டோம்.
அது எக்குத்தப்பாக வந்து சாலையின் நடுவே வந்து மாட்டிக்கொணடது
புரிந்தது.

ஒருவேளை தன் விளையாட்டுப் புத்தியால் வந்து மாட்டியிருக்கலாம்,
இல்லை ஏதாவது துரத்தி,ன் உயிரைக் காப்பத்திகொள்வதற்காகக் கூட
இருக்கலாம்.
தன் தாயைத் தேடித் திரியலாம்,.
எதுவாக இருந்தாலும் வந்து மாட்டிக்கொண்ட்து.
நானும்,நண்பரும்


எதையும் தாங்குவோம் !

காற்றும் புகையும்




கலைத்துவிடுகின்றன ,



ஆயிரமாயிரம் கால்கள்



நடந்தாலும்


அன்பு தெய்வம்


 எப்படி அடையாளம் காண்கிறாய்
         எத்தனை வருடங்கள் ஆனாலும் ,
               எவ்வளவு தூரம் போனாலும் ,
                                     நீ மறக்கவில்லை,

                நண்பர்களும் ,சொந்தங்களும்
              மறந்து போன என்னை
               நீ மறக்கவில்லை !



கூழாங்கல்

ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.
அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.
அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.


அந்தப் பத்தியில் கருங்கடற்கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடும். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது


வெள்ளியங்கிரி மலைப்பயணம்




கடந்த இரு வாரங்களுக்கு முன் பௌர்ணமி அன்று நானும், எனது சில நண்பர்களும் இரவில்
திடீரென வெள்ளியங்கிரி மலை செல்லலாம் என்று முடிவெடுத்தாயிற்று.
நாங்கள் முடிவெடுத்து முடிவதற்குள் மணி 8.30 ஆகிவிட்டது.(ஒரு வழியா முடிவுக்கு வந்துட்டாங்க).
“சரி கிளம்புவோம்” என்று பேருந்து நிலையம் செல்ல முற்பட்டபோதுதான் அந்த நேரத்தில் அங்கே பேருந்து இருக்காது என்று தோன்றியது.
பிறகு இரு சக்கர வாகனத்தில் செல்லலாம் என்று கிளம்பியாச்சு.ஏற்கனவே நமக்கெல்லாம் பைக் ரைடிங் போவதில் விருப்பம்.அடுத்து பெட்ரோல்,டயர்களின் நிலை,காற்று ஆகியவற்றை பரிசோதித்துவிட்டு எல்லோரும் கிளம்பினோம்.
போகும் வழியிலேயே சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்பி ஒரு வழியா உக்கடம் பைபாஸைத் தொட்டுவிட்டோம்.

அப்போது மணி 10 ஐத் தொட்டுவிட்டது.கோவை மக்களின் பரபரப்பு கொஞ்சம் குறைந்துவிட்டுப் போயிருந்தது.
உக்கடம் தாண்டி பேரூர் செல்லும் வழியில் காவல்துறையினர் சோதனைச் சாவடியில் காவலர்கள் இருவர் “குடி”மகன்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.நாங்க மொத்தம் மூன்று பேர் ஒரு வண்டியில் சென்றதால் ,ஒருவர் சோதனைச்சாவடிக்கு முன்னரே உள்ள உணவகத்தில் இறங்கி விட்டு,பின் இன்னோருவரை சோதனைச்சாவடி தாண்டி இறக்கிவிட்டுப் பின் மீண்டும் ,அந்த உணவகத்தில் உள்ளவரை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
யார் இறங்குவது என்று முடிவானபோது “நானே இறங்குகிறேன்” என்று இறங்கிக்கொண்டேன்.பின் அந்த உணவகத்தில் நின்றவாறு சோதனைசாவடியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
இப்படி செய்ததால்தான் காவலர்களிடமிருந்து தப்பித்தோம்(செஞ்சது தப்புத்தானுங்கோ),
அப்பவும் நல்ல டிப்டாப் ஆசாமி ஒருவர் காவலர்களிடம் போதையில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.பிறகு “drink and drive ” என்று புகார் எழுதி ரூ 500/- ஐ வசூல்செய்து தன் கடமையை செவ்வனே செய்துமுடித்தார்கள் அந்த இரு காவலர்களும்.


டவுன் பஸ்




பல நாட்களாகவே இந்த அனுபவத்தைப் பதிவிடனும்
என்றிருந்தேன்,காலம் கிடைக்காத பணிதான் காரணம்.(வெட்டியாய் இருப்பதற்கு
இவ்வளவு பில்டப்னு சொல்றது கேக்குது).
நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

பேருந்தில் பயணம் செல்வது என்பது ஒரு இனிமையான நிகழ்வுதான்.அதுவும் ஜன்னலோர
இருக்கையில் அமர்ந்து பயணிப்பது ,விவரிக்க முடியாத ஒரு இன்பத்தைத் தரும்.மரங்களும்,கரண்ட் கம்பங்களும் நம்மை விட்டு வேகமாய் விலகி செல்லும்.

நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில், நகரப் பேருந்துகள்தான் வரும் .நான் வசிக்கும்
கிராமத்திற்குபேருந்து வசதி கிடையாது.அருகிலுள்ள ஊருக்குத்தான் ஓரிரு நகரப்பேருந்துகள்
மட்டுமே வந்து செல்லும்.அது ஒரு கிராமத்துப் பேருந்து என்றுதான் சொல்லவேண்டும்.

எங்களூரிலிருந்து சுமார் 2கி.மீ. நடந்து சென்றுதான் அருகிலுள்ள ஊரில் பஸ் பிடித்துச் செல்லவேண்டும்,.
அதுவும் அந்தப் பேருந்து வரும் நேரத்தைவைத்துத் தான் மணி இவ்வளவு என்று
பிள்ளையார் மரத்தடி பெருசுக கணக்கிட்டுக் கொள்வார்கள்.

மதிய நேரம் தேர்வு எழுதச்செல்லும் நாட்களில் பஸ்ஸ்டாப்பை அடையும் முன்னரே பஸ்
வந்து நின்று கொண்டிருக்கும்.
ஓட்டுனரும்,நடத்துனரும் பிள்ளையார் கோவிலினுள் உட்கார்ந்துசாப்பிட்டுவிட்டு
செய்த்திதாள் படித்துக் கொண்டிருப்பார்கள்.அதற்குள் வரவேண்டியவர்கள்
வந்துவிட பேருந்தும் புகையைக் கக்கிகொண்டு புறப்படும்.

சீட்களில் பேர்
எழுதுவதும்,


Animated Social Gadget - Blogger And Wordpress Tips