ஷாஜஹானின் ஆட்சியின் கடைசிகாலகட்டம் அது.ஔரங்கசீப் ஆட்சி அரங்கேறியது.
தன் தந்தையை சிறை வைத்தார் ஔரங்கசீப்.
ஆக்ரா கோட்டையில் எட்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்ட ஷாஜகானுக்கு மாற்று உடைகளும், எழுதும் உபகரணங்களும் மறுக்கப்பட்ட காலம்.அவர் அணிந்திருந்த ஆபரணங்களும் அகற்றப்பட்டன.
“பூனை இளைத்தால் எலிக்குக் கொண்டாட்டம்” என்னும் முதுமொழிக்கேற்ப ஷாஜகானை
காவலாளிகள் கூட மரியாதைக் குறைவாக நடந்து கொண்டனர். மகனான ஔரங்கசீப் மதித்தால்தானே காவலர்கள் மதிப்பதற்கு.
வெறுப்பின் உச்சகட்டத்திற்கு போன ஷாஜகானுக்கு பாலைவனச்சோலையாக இருந்தது தன் மகளான ஜஹனாராதான்.மகன் மதிக்காது போனாலும் தன் மகள் ஜஹனாராவாவது தமக்கு சிறையில் உதவியாய் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது ஷாஜகானுக்கு.
பெரும்பாலான பொழுதை தொலைவில் தெரியும் தன் காதல்மனைவியின் கல்லறையான தாஜ்மஹாலையே கண்ணிமைக்காமல் பார்த்து தன் நிலை எண்ணி கவலையுற்று,நோய்வாய்ப்பட்டார்.
புனித குர் ஆன் படிப்பதற்குமட்டுமே ஷாஜஹானுக்கு ஔரங்கசீப் அனுமதித்தார்.
(மகன் தந்தைக்கு ஆற்றும் செயல்).
அந்த நிலையிலும் தன் சகோதரியின் வேண்டுகோளுக்கிணங்கி ஔரங்கசீப் ,ஆளுயர கண்ணாடி ஒன்றை ஷாஜஹான் தாஜ்மஹாலை பார்க்கவசதியாக வைப்பதற்கு ஔரங்கசீப் அனுமதித்தார்.
தன் உயிர் பிரிந்த வேளையிலும் ,அவரின் தலை தாஜ்மஹாலைப் பார்க்க வைக்கப்பட்டிருந்த கண்ணாடியின் பக்கமே திரும்பியிருந்தது.
தன் மனைவியின் கல்லறையான தாஜ்மஹாலைப் பார்த்தவண்ணம் தன் உயிரை விட்டிருந்தார்
முகாலயப் பேரரசராய் இருந்து ம்கனாலேயே சிறை வைக்கப்பட்ட ஷாஜஹான்.கடைசி
தன் மகளான் ஜஹனாராவிடம் கூடப் பேசவில்லை.முப்பொழுதும் மும்தாஜ் நினைவாலேயே உயிரை விட்டிருந்தார் ஷாஜஹான்.
ஆனால் கருமியான ஔரங்கசீப் தன் தந்தையின் கடைசி கால ஆசையை நிராகரித்து,
“அந்த வீண் செலவு எல்லாம் தேவையில்லை,தாஜ்மஹாலிலேயே இடமிருக்கிறது”,,,என்றுசுருக்கமாய் சொல்லிவிட்டார்.
த்ந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிசடங்குக்கும் ஔரங்கசீப் நேரம் ஒதுக்கவில்லை.ஜஹனாராதான் தந்தையின் மறைவிற்கு வருந்திய வாரிசு ....
ஔரங்கசீப் ஆணையின்படி ஷாஜஹானின் உடல் யமுனை நதியோர காதல் சின்னமான தாஜ்மஹாலில், தன் மனைவியருகிலேயே ஷாஜஹான் அடக்கம் செய்யப்பட்டார்.
பாதுஷாவாய் இருந்து ,பின் தன் மனைவியை இழந்து,மகனாலேயே சிறை வைக்கப்பட்ட ஷாஜஹானும்,மும்தாஜும் உடலளவிலும் கூடப் பிரியாமல்,ஒன்றாகவே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வாறு செய்து ஔரங்கசீப் தெரிந்தோ,தெரியாமலோ தாஜ்மஹால் நிலையாய் இருக்க காரண்மாய் இருந்தார்.
இன்றளவும் புகழ்பெற்றுள்ள காதல் சின்னமான தாஜ்மஹால் கம்பீரமாய் நின்றுகொண்டு இருக்கிறது.
ஆனால் அதன் பிண்ணனியில் பல வேதனையான நிகழ்வுகள் ஷாஜஹானோடு புதைக்கப்பட்டிருக்கிறது.
பளிங்குக் கல்லால் ஆன இந்த கல்லறை மாளிகையின் வரலாற்றுப் பிண்ணனி ,
ஷாஜஹான் ,,மற்றும் மும்தாஜ் இவர்களின் இருண்ட பக்கங்கள்தான்......
தாஜ்மஹாலைப் பார்க்கும் ஒரு நிமிடம் அந்தக். கல்லறைகளின் மௌனமான மொழியால்
நமக்கு உணர்த்துவது என்ன?
யமுனை ஆற்றின் கரையில் தன்னகத்தே பல துயரங்களைச் சுமந்து கொண்டு பளிங்குக்
கல் மாளிகையில் இரு ஆத்மாக்கள் மௌனமாய் உறங்குகின்றன.
கம்பீரமாய் தாஜ்மஹால்..காதலின் சின்னமாய்.
கல் மாளிகையில் இரு ஆத்மாக்கள் மௌனமாய் உறங்குகின்றன.// தட்டி எழுப்ப வேண்டியதுதானே
ReplyDeleteதட்டித்தான் எழுப்ப வேண்டுமா?
ReplyDelete