அறிவிப்பு
அன்பு தெய்வம்

எத்தனை வருடங்கள் ஆனாலும் ,
எவ்வளவு தூரம் போனாலும் ,
நீ மறக்கவில்லை,
நண்பர்களும் ,சொந்தங்களும்
மறந்து போன என்னை
நீ மறக்கவில்லை !
அழகும் ஆபத்தும்

ஒரு கையால்
கவிதையும் பேசும்
நடிகை:

----------------
அந்தப்
பிரபல நடிகையின்
பொன்மேனி
புழுக்கம் தாங்காமல்
வியர்த்துக்
கொட்டியது.......
காரணம்!
அவளைச் சுற்றி
ஆயிரமாயிரம் விசிறிகள்.
---------------------------

காதலியிடம்:
-------------
உன் நீள்முடியை
இங்கிருந்தே
என் நினைவுச் சீப்புகளால்
நீ(சீ)வி விட்டு
அதில் எத்தனை முறை நான்
எண்ண மலர்களைச்
செருகியிருக்கிறேன்!.
-------------------------------------
இருட்டில் உடன் வரா நிழல்கள்:
----(தலைப்பே ஒரு கவிதை மாதிரி இருக்கு

)-----
ரயில்கள் மட்டுமல்ல
மனிதர்களும் தான்
ஓடத் தொடங்குகிறார்கள்.!!கை இறங்கியவுடன்-நம்
கை இறங்கியவுடன்
------------------------------
மெல்லிசை மன்னர் M.S.V பற்றி
----------------------------
உன்னிடம்
அடகு வைக்கப்பட்ட

ஆயிரமாயிரம் காதுகள்

இன்னமும் மீட்கப்படாமலேயே
இருக்கின்றன.
(கவிஞர் வாலியின் “பொய்க்கால் குதிரைகள்” கவிதைத் தொகுப்பிலிருந்து)
தன் காதலியை இன்னோரு ஆடவனுடன் கைகோர்க்கும் கல்யாணக் காட்சியினை பார்க்கும் காதலன் சொல்வது:
அன்றைக்குச் செத்து
விழுந்ததுதான்

இந்தக் காதல்!
தூக்கிக் கொண்டு
இன்னமும்
மரண ஊர்வலம்
நடத்துகிறேன்—
புதைக்க மனமில்லை,
எரிக்கவும் வழியில்லை!
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
பகலவன் மறைந்தே பனி

பொழுதெல்லாம் இரை தேடி பொழுதோடு கூடு திரும்புது கொக்குகள்,
பசுங்கிளிகளும்,களவாடிய காக்கைகளும் ,
கதிரவன் முன்னே கருவேள் முள் கூட்டுக்கு திரும்பியாச்சு!
பொழுதெல்லாம் போச்சு,
கதிரவன் மறைந்து புதியதாய்
நிலா அவள் உதிக்கறாள்!

விளக்கதிலே திரி தீண்டுகிறாள்;
காணலேன்னு வழி நோக்கி
காத்திருக்கும் மனைவிஒருத்தியவள்;
சேர்த்தே மணிக்குள் சோறாக்கி

இவையெல்லாம் இனியதோர் கிராமத்து
மாலைப்பொழுதின் மயங்கும் பொன் நேரமது,
நம்புங்கள், நாம் தமிழர்தாம்!!!!



பெளர்ணமி நிலா

படித்ததில் பிடித்தது.

எங்கேயோ படித்தது!!