Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
Showing posts with label என்றும் நினைவில். Show all posts
Showing posts with label என்றும் நினைவில். Show all posts

என்ன செய்யப்போகிறது இளைஞர் சமுதாயம் - கோ நம்மாழ்வார்


நன்றி : தினமலர்
(2011).

கிராமங்களைப் பற்றி பேசச் சொன்னால் பல் முளைக்கும் குழந்தை போல லயித்துச் சிரிக்கிறார் வேளான் ஞானி கோ.நம்மாழ்வார்.

“”எங்கள் கிராமத்து வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பி வழியும். சிறு வயதில் குட்டிக்கரணம் அடித்து குதூகலிப்போம் . வண்டிகளும், மாடுகளும் அதில்தான் இறங்கி ஏறும். பின் அங்கே பாலம் வந்தது.
கோடை காலத்தில் தண்ணீர் இல்லாத வெது மணலில் சடுகுடு ஆடினோம். இன்று வாய்க்காலில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை.
இருமருங்கிலும் நெல்லி, மா, நாவல் மரங்கள் இருந்தன. இன்று அவையெல்லாம் அருகிவிட்டன.
மாலை நேரங்களில் நிலா வெளிச்சத்தில் குழந்தைகள் ஓடியாடி விளையாடும். தாய் தகப்பனுடன் வீட்டின் திண்ணையில் அமர்ந்து குழந்தைகளின் சேட்டைகளைக் கண்டு ரசிப்பதோடு தங்களின் கஷ்ட நஷ்டங்களை அண்டை அயலாரோடு பகிர்ந்து, கூடி வாழ்ந்தார்கள்.

இன்பம் செழித்த மருத நிலமாகத் திகழ்ந்த மக்கள் வாழ்வு இன்று பாலையாகவே மாறிவிட்டது. இன்று ஏன் நினைவுகளின் நிழலைக்கூட அங்கு காணமுடிவதில்லை.



இழந்துபோன இன்பங்கள்-பகுதி 1

இன்றைய வெளிநாட்டு மோக வாழ்க்கையில், நாம் ஒரு இயந்திர வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நம் தமிழர்மரபுகள் பல மறக்கப்பட்டு விட்டன,ஏன் மறக்கடிக்கப்பட்டது என்றே சொல்லலாம்.
முந்தைய காலகட்டங்களில்  மக்கள் பலதுறைகளில் கைதேர்ந்தவர்களாய் இருந்தார்கள்.இப்போது இருக்கும் நாமோ ஒரு துறையினையே நல்ல முறையில் கற்று தேர்வதில்லை.அது போக நமக்கு அனுபவ அறிவும் போதவில்லை.






வீரப்பன் ஒரு ராபின் ஹூட்

வீரப்பன் 
இந்தப் பெயரைக் கேட்டால் யார் நடுங்குகிரார்களோ இல்லையோ அரசு அதிகாரிகள் நடுங்குவார்கள் .
சத்தி வனப்பகுதியைப் பொறுத்தவரை  வீரப்பன் ஒரு ராபின் ஹூட் மாதிரி .
கர்நாடகம்  வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதும் ,சுருட்டிக் கொண்ட தனது  வாலை
நம் காதுக்குள் விட்டு ஆட்டுகிறது .
வீரப்பனை எதிர்மறையாக பலர் உணர்ந்தாலும், வீரப்பன் வாழ்ந்த காட்டிற்கு அருகே இருக்கும் கிராம மக்கள் தங்கள் காவல் தெய்வமாகத்தான்  வீரப்பனைப்  பார்த்தார்கள்.
பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்களை முறையற்ற வகையில் களவாடி அதை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து வாழ்வு நடத்திய ஏழைகளின் பங்களான் எனப்படும் ராபின் ஹூட்டின்


தாஜ்மஹாலின் இருண்ட பக்கங்கள்-வெளிவராத மர்மங்கள்-2


முகலாயமன்னர் ஷாஜகானால் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டபட்ட சமாதிதான் தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்றான ''தாஜ்மஹால்'' என்று வரலாறு தெரிவிக்கிறது. 
ஆனால் தாஜ்மஹால் என்பது ''தேஜாமஹாலயா'' என்றழைக்கப்பட்ட பழைய சிவன் கோவில்தான் என்கிற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.   
    
 தாஜ்மஹால்  குறித்து தகவல்கள் அனைத்தும் உலகை ஏமாற்றியுள்ளது. தாஜ்மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது புராதான சிவன்கோயில் என்று ஆதாரங்களுடன் கூறுகிறார் இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக். 
முன்பு ''தேஜாமஹாலயா'' என்கிற பெயரால் தாஜ்மஹால் அழைக்கப்பட்டுவந்தது என்று அவர் தெரிவிக்கிறார், ஜெய்ப்பூர் ராஜா ஜெய்சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கை குறிப்பான ''பாத்ஷாநாமாவில்'',ஆக்ராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்தெடுத்தது குறித்து குறிப்புகள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.
இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக்.







பாத்ஷாநாமாவில் பழமையான தாஜ்மாஹாலை ஒப்படைக்க கேட்டு மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் மன்னர் ஜெய்சிங்கிற்கு ஆணை பிறப்பித்து உள்ள ஆவணம்.
ஆதியில் சிவன்கோயிலாக இருந்ததை கையளிக்கச் சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய்சிங் ராஜாவிற்கு அனுப்பட்ட இரு ஆணைகள் இன்னும் பத்திரமாகவே உள்ளன என்றும்,கைப்பற்றி கொள்கின்ற


நாசாவின் பயமும் :நமது பழமையான பலமும்

இந்தப் பதிவில் இரண்டு முக்கியமான விஷயங்கள் பதிவிடப்படுகின்றன.
1.திருநள்ளார் சனிஸ்வர பகவானும் ,நாசாவும் ,.
2.பாம்பு விஷம் மற்றும் அமுதம் பற்றியும் . 

சனி பகவான் 
இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது.

இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.





என்ன விலை இந்த உயிர் ?

ஒரு வாரத்திற்கு முன் நடந்த சம்பவமிது.
மாலை 5.30 மணி இருக்கும்.சூரியனின் அந்தி நேர ஒளிக்கீற்றுகள்
மரங்களின் வழியே சாலையில் மின்னிக் கொண்டிருந்த்து.
சாலையில் நானும் ,எனது நண்பரும் இரு சக்கர வாகனத்தில் வந்து
கொண்டிருந்தோம்.
பேருந்துகளும்,கனரக வாகனங்களும்,இன்னும் சில எமனின் ஏஜண்ட்டுகளும்
எங்களை விலக்கிக் கொண்டு முந்திச் சென்றன.
எந்தவொரு வாகனமும் மிதவேகமாகச் சென்றிருக்காது.எல்லாமே
மிகவேகம்தான்.
எங்களை கடந்து சென்ற ஒரு மினி ஆட்டோ ,சாலையில் ஒரு எட்டுப் போட்டு சென்றது.
“ஒருவேளை R.T.O பாத்துட்டு இருப்பாரோ?,இவனுக்கு லைசென்ஸ் கொடுப்பதற்கு?என்று கமெண்ட் அடித்துக்கொண்டு வந்தோம்,நானும்,நண்பரும்,
அப்பொழுதுதான் ஒரு பூனைக்குட்டியொன்றை சாலையில் கண்டோம்.
அது எக்குத்தப்பாக வந்து சாலையின் நடுவே வந்து மாட்டிக்கொணடது
புரிந்தது.

ஒருவேளை தன் விளையாட்டுப் புத்தியால் வந்து மாட்டியிருக்கலாம்,
இல்லை ஏதாவது துரத்தி,ன் உயிரைக் காப்பத்திகொள்வதற்காகக் கூட
இருக்கலாம்.
தன் தாயைத் தேடித் திரியலாம்,.
எதுவாக இருந்தாலும் வந்து மாட்டிக்கொண்ட்து.
நானும்,நண்பரும்


ஹிட்லரின் மறுபக்கமும் ,மரணமும்


சோவியத் ரஷ்யப்படைகள் ஜெர்மன் மீது படையெடுத்தது.ஜெர்மன் தலைநகரம் பெர்லின் மீது
சோவியத் படைகள் நிலைகொண்டு தன் வெற்றியை உறுதி செய்தது.
சோவியத் யூனியன் மீது மட்டும் ஹிட்லர் போர் தொடுக்காமல் இருந்திருந்தால் ஜெர்மனுக்கு
இந்த நிலைமை வந்திருக்காது.

1945 ஏப்ரல் 30 ஆம் தேதி அதிகாலை 2.30 மணி.ஹிட்லர் தன் மாளிகையில் உள்ள பாதாள அறையில்
தன் நண்பன் கோயபல்ஸ், மற்றும் தன் காதலி ஈவா பிரவுனுடன் பதுங்கியிருந்தார்.
தன் அறைக்கு அருகில் இருக்கும் தன் நண்பன் கோயபல்ஸை அழைத்தார் ஹிட்லர்.
ஹிட்லரின் அந்தரங்கச் செயலாளர் ப்ராஜூங்கேவுடன் இரண்டு முக்கிய ஆவணங்களை
தயார் செய்தார் ஹிட்லர்.
ஒன்று அவருடைய உயில்,மற்றொன்று அரசியல் ஏற்பாடு.உயிலை நிறைவேற்றும் பொறுப்பு மார்டின் போர்மன் என்பவரிடம் தரப்பட்டது.
1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர்.
எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம்


டவுன் பஸ்




பல நாட்களாகவே இந்த அனுபவத்தைப் பதிவிடனும்
என்றிருந்தேன்,காலம் கிடைக்காத பணிதான் காரணம்.(வெட்டியாய் இருப்பதற்கு
இவ்வளவு பில்டப்னு சொல்றது கேக்குது).
நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

பேருந்தில் பயணம் செல்வது என்பது ஒரு இனிமையான நிகழ்வுதான்.அதுவும் ஜன்னலோர
இருக்கையில் அமர்ந்து பயணிப்பது ,விவரிக்க முடியாத ஒரு இன்பத்தைத் தரும்.மரங்களும்,கரண்ட் கம்பங்களும் நம்மை விட்டு வேகமாய் விலகி செல்லும்.

நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில், நகரப் பேருந்துகள்தான் வரும் .நான் வசிக்கும்
கிராமத்திற்குபேருந்து வசதி கிடையாது.அருகிலுள்ள ஊருக்குத்தான் ஓரிரு நகரப்பேருந்துகள்
மட்டுமே வந்து செல்லும்.அது ஒரு கிராமத்துப் பேருந்து என்றுதான் சொல்லவேண்டும்.

எங்களூரிலிருந்து சுமார் 2கி.மீ. நடந்து சென்றுதான் அருகிலுள்ள ஊரில் பஸ் பிடித்துச் செல்லவேண்டும்,.
அதுவும் அந்தப் பேருந்து வரும் நேரத்தைவைத்துத் தான் மணி இவ்வளவு என்று
பிள்ளையார் மரத்தடி பெருசுக கணக்கிட்டுக் கொள்வார்கள்.

மதிய நேரம் தேர்வு எழுதச்செல்லும் நாட்களில் பஸ்ஸ்டாப்பை அடையும் முன்னரே பஸ்
வந்து நின்று கொண்டிருக்கும்.
ஓட்டுனரும்,நடத்துனரும் பிள்ளையார் கோவிலினுள் உட்கார்ந்துசாப்பிட்டுவிட்டு
செய்த்திதாள் படித்துக் கொண்டிருப்பார்கள்.அதற்குள் வரவேண்டியவர்கள்
வந்துவிட பேருந்தும் புகையைக் கக்கிகொண்டு புறப்படும்.

சீட்களில் பேர்
எழுதுவதும்,


கவிதையும் பேசும்


நடிகை:

----------------

அந்தப்

பிரபல நடிகையின்

பொன்மேனி

புழுக்கம் தாங்காமல்

வியர்த்துக்

கொட்டியது.......

காரணம்!

அவளைச் சுற்றி

ஆயிரமாயிரம் விசிறிகள்.

---------------------------


காதலியிடம்:

-------------

உன் நீள்முடியை

இங்கிருந்தே

என் நினைவுச் சீப்புகளால்

நீ(சீ)வி விட்டு

அதில் எத்தனை முறை நான்

எண்ண மலர்களைச்

செருகியிருக்கிறேன்!.

-------------------------------------

இருட்டில் உடன் வரா நிழல்கள்:

----(தலைப்பே ஒரு கவிதை மாதிரி இருக்கு

)-----

ரயில்கள் மட்டுமல்ல

மனிதர்களும் தான்

ஓடத் தொடங்குகிறார்கள்.!!கை இறங்கியவுடன்-நம்

கை இறங்கியவுடன்

------------------------------

மெல்லிசை மன்னர் M.S.V பற்றி

----------------------------

உன்னிடம்

அடகு வைக்கப்பட்ட

ஆயிரமாயிரம் காதுகள்

இன்னமும் மீட்கப்படாமலேயே

இருக்கின்றன.

(கவிஞர் வாலியின் “பொய்க்கால் குதிரைகள்கவிதைத் தொகுப்பிலிருந்து)

----------------------------------------

தன் காதலியை இன்னோரு ஆடவனுடன் கைகோர்க்கும் கல்யாணக் காட்சியினை பார்க்கும் காதலன் சொல்வது:

அன்றைக்குச் செத்து

விழுந்ததுதான்

இந்தக் காதல்!

தூக்கிக் கொண்டு

இன்னமும்

மரண ஊர்வலம்

நடத்துகிறேன்—

புதைக்க மனமில்லை,

எரிக்கவும் வழியில்லை!

(சதாசிவத்தின் “இன்னும் ஒரு மகரந்தம்கவிதைத் தொகுப்பிலிருந்து.)......................
அடுத்த பதிவில்...............


மாலைப் பொழுதின் மயக்கத்திலே


மாலைப் பொழுதின் மயக்கத்திலே
பகலவன் மறைந்தே பனி படறது பால்போலே,

பொழுதெல்லாம் இரை தேடி பொழுதோடு கூடு திரும்புது கொக்குகள்,

பசுங்கிளிகளும்,களவாடிய காக்கைகளும் ,
கதிரவன் முன்னே கருவேள் முள் கூட்டுக்கு திரும்பியாச்சு!

பொன்னொளி வீசியே
பொழுதெல்லாம் போச்சு,

கதிரவன் மறைந்து புதியதாய்
நிலா அவள் உதிக்கறாள்!இப்படியதோர் மாலைப் பொழுதிலே

மங்கையவள் மங்களாய் ஒளிகொண்ட
விளக்கதிலே திரி தீண்டுகிறாள்;

கழனி சென்ற களைப்புடனே தலைமேல் விறகோடு
இல்லம் சேர்ந்தாள் இல்லாள்;

பட்டணம் போன பன்னாடியைக்
காணலேன்னு வழி நோக்கி
காத்திருக்கும் மனைவிஒருத்தியவள்;

மண்சட்டியதிலே நெய்யும், கடுகும்
சேர்த்தே மணிக்குள் சோறாக்கி மணாளனுக்கும்,மகவுக்களுக்கும் பரிமாறும் தாயொருத்தி., .

மாட்டையும்,ஆட்டையும் கன்றுக்கு
பாலூட்டிவைத்து மிஞ்சியதை கறந்தே
இல்லம் வருகிறான் மறவனவன்!மாலையும் இராவும் இரண்டறக் கலந்தே மாலை மாண்டு இரவே வாகை சூடுது,

இவையெல்லாம் இனியதோர் கிராமத்து
மாலைப்பொழுதின் மயங்கும் பொன் நேரமது,







நினைவஞ்சலி


ரு நொடி விபத்து எத்தனை பேரின் எதிர்காலத்தை , நம்பிக்கையைச் சிதைத்து விடுகிறது.

இந்த 2012 அழிவின் ஆரம்பம் என்பதைப் பல நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.



சில சம்பவங்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
நேற்று என்பதும்,நாளை என்பதும் பொய்.,
இன்று அதுவும் இந்த நொடி மட்டுமே உண்மை.


மரணம் என்பது மனிதப்பிறவி எனும் பாவத்தில் இருந்து விடுதலை அளிப்பது,

அந்த மரணத்தை இறைவன் இளவயதிலேயே கொடுப்பதால் ஒருவன் விரைவாக முக்தியடைகிறான்.


மலத்தையும்,சிறுநீரையும் வயித்திலே,எச்சிலையும்,வியர்வையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த பாவ கூட்டிலிருந்து உயிர் பிரிவது முக்தியடையும் செயல்.




மரணம்

.இயற்கையின் தயக்கமற்ற நியாயத் தீர்ப்பு !...'' . இதை யாரால் தான் தடுக்க முடியும்.


அவதூறாக அர்த்தம் கூறப்பட்டு
கற்பனைவாதிகளால்
அற்பமாக்கப்படும்
இயற்கையின்
வியத்தகு நியதி !

மரணம்!.


கடந்த 27-12-2011 அன்று நடந்த கோர விபத்தில்
தன்னுயிர் ஈந்த எங்கள் உடன்பிறவா சகோதரனும்

ஆருயிர் நண்பனுமாகிய


ப.பாலகணபதி

(அவரின் இரு சக்கர வாகனத்திற்கும் அவருக்கும் சேர்த்து அஞ்சலி )

ஐயப்ப (கன்னி)சாமியாகவே இறைவனிடம் சரணம் அடைந்துவிட்டார்.
அவர்களின் ஆன்மா முக்தியடைந்து விட்டதற்க்காகப் பிரார்த்திப்போம்!!










தலைவணங்குவோம்!

பாசத்திற்கு அடிமையாகாதவர்கள் இருக்க முடியாது.அப்படி ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் முற்றும் துறந்த முனிவராகத்தான் இருக்க முடியும்.
ஆனால் ஒரு அரசியல்வாதி அதுவும் ஒரு மாநிலத்தின் முதல்வர் அப்படி இருந்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம் அவர்தான் நம் கர்மவீர
ர் “காமராஜர்”.


காமராஜர் முதல்வராய் இருந்த சமயம்,அவரின் தாயார் சிவகாமி அம்மையார் தெருவில் உள்ள ஒரு குழாயில் சென்று தண்ணீர் பிடிப்பார்.எழுபது வயதிற்கும் அதிகமான ஒரு தாய்,அதுவும் முதல்வரின் அம்மா தெருக்குழாயில் சென்று தண்ணீர் எடுப்பதைப் பார்த்த அதிகாரிகள் அந்த அம்மாவின் வீட்டிற்கு ஒரு குடிநீர் குழாய் அமைத்துக் கொடுத்தார்கள்.

ஒரு நாள் காமராஜர் தன் தாயாரைப் பார்க்க விருதுநகர் வீட்டிற்கு சென்றார்.புதிதாக குடிநீர்க் குழாய் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார்.
‘அம்மா யாரிந்தக் குழாயை வச்சா?’ என்று கேட்டார்.
‘என்னால உடம்புக்கு முடியல...அதனால முனிசி்பாலிட்டிக்காரங்க வச்சாங்க’ என்று அவரின் அம்மா கூறினார்.

காமராஜர் உடனே அவர்களுக்கு போன் பண்ணி அவர்களை வரச் சொன்னார்.
‘என்ன இது....?என் அம்மாவிற்கு மட்டும் தனி வசதி.இதை உடனே அகற்றி விடுங்கள். இனி இதுபோல் நடக்கக் கூடாது’ என்று எச்சரித்தார்.


அதோடு’அம்மா.... நமது ஊரில் நம்மைப்போன்ற சாதாரண மக்கள் எப்படி தண்ணீர் பிடிக்கிறார்களோ அப்படித்தான் நாமும் ஊர்க்குழாயில் தண்ணீர் பிடிக்கவேண்டும்’ என்று தாயாருக்கே பாச உத்தரவு போட்டார்.



கோடிகோடியாய் பணம் சேர்க்கும் இன்றைய அரசியல்வாதிகளிடம் காமராஜர் குன்றென நிமிர்ந்து நிற்கிறார்.காமராஜரின் பாச உணர்வும்,தியாக மனப்பான்மையும்,கடமையில் எள்ளளவும் தவறாத பண்புள்ளம் கொண்ட இவரைப் போன்றவரை இனி நாடு காணுமோ?


மறக்க முடியுமா?


நாம் தினந்தோறும் பல பேரை சந்திக்கின்றோம்,ஆனால் நம் நினைவில் நிற்பவர்கள் எத்தனை பேர்? ,அப்படி எல்லோர் நினைவிலும் நிற்கும் அதுவும் திரைத்துறையில் இருந்தவர் பற்றி காண்போம்.

அவர்தான் நம் மனதில் தருமியாக வாழும் நாகேஷ் அவர்கள்!

1933 ஆம் வருடம் தாராபுரத்தில் பிறந்த நாகேஷ்(இயற்பெயர்:கிருஷ்ணராவ் குண்ட்டுராவ்,) சென்னையில் பயின்று இந்தியன் ரயில்வேயில் கிளர்க் ஆக பணியாற்றியவர்.

பின் திரைத்துறையில் நுழைந்து தனெக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் நாகேஷ்.இவர் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல ,சிறந்த குணச்சித்திர நடிகர் என்று உலகிற்கு காட்டியது சர்வர் சுந்தரம்திரைப்படம் தான்.

இவ்ர் சிவாஜி,எம்.ஜி.ஆர்,ஜெமினி,முத்துராமன்,எஸ்.எஸ்.ஆர்.,ரஜினி,கமல், போன்றோருடன் மட்டுமின்றி இளைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜித்,தனுஷ்,சிம்பு போன்றவர்களுடனும் நடித்துள்ளார்.

எல்லோரையும் விட கமலுடன் நல்ல நட்பு கொண்டிருந்தார்,”நம்மவர்திரைப்படத்துக்காக தேசிய விருது கிடைத்தது.கமலின் அனைத்து படங்களிலும் கண்டிப்பாக நாகேஷ் நடித்திருப்பார்.

இவரின் கடைசித் திரைப்படம் தசாவதாரம்”.

கடைசி காலத்தில் தன் மகனான நடிகர் ஆனந்த்பாபுவைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார்.

இப்படிபட்ட நகைச்சுவை உலகின் மன்னன், எல்லோரையும் சிரிக்க வைத்த இவர் தியாகிகளின் தினமான ஜனவரி 30,2009 ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.

அவர் மறைந்தாலும் அவர் நினைவுகள் நம்மிடையே வாழ்ந்து கொண்டே இருக்கும்.



Animated Social Gadget - Blogger And Wordpress Tips