மனிதர்களைக் கெடுப்பவை இவை மூன்றும் தான்:
1. மறதி
2. மடி (சோம்பல்)
3. துயில் (தூக்கம்)
முதலில்” “மறதி”யைப் பற்றி:
”நான் யார்?” என்ற ஞாபகம் இல்லாமை.அதனால்தான் உடம்பாகிய கூட்டை
தானாகவே எண்ணிக்கொண்டோம்.ஐம்புலன்களால் உலகை
அனுபவிக்க அலைகிறோம்.கணநேரம் தோன்றும் வானவில் போன்ற வாழ்க்கைக்கு
மனம் அலைகிறது,. நிரந்தரமற்றதை நிரந்தரமாக்க எண்ணுகிறோம்..
அப்போதைக்குக் கிடைக்கும் அற்ப சுகத்துக்காக பேராசையில் பெரிதாகப்
பாடுபட்டு அயர்ச்சி அடைகிறோம், ஆன்மாவை மறந்தோம்.இதிலெங்கே
இறைவனவனை நினைப்பது.அதனாலே சம்சாரத்தில் வீழ்கிறோம்,
ஆசை என்ற சங்கிலியால் பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ளோம்.
ஆனால் மறதியும் வேண்டும்,ஆனாலும் மறதி மட்டும் இல்லையெனில் இன்று நம்மில் பலர்
பைத்தியமாக அலைய வேண்டியிருக்கும். மறதியே வாழ்க்கையாகக் கூடாது.
ஏனெனில்”” “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சல்லவா?”
அடுத்து “மடி” என்னும் சோம்பல் பற்றி:
செயலில்லாமல் முடங்கிக் கிடத்தல் ஒருவனைக் கெடுக்கிறது. செயலூக்கமில்லா
நிலையும்,செத்த நிலையும் ஒன்றே.பொறுமை என்ற பெயரில்,
சகிப்புத்தன்மை என்ற சாக்கில், இன்றும் பலர் செயல்படாமல் தங்களின் திறமைக்கு
சாவு மணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.போதை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கேட்டால் சமாதான புறாக்களை பறக்க விடுவதாகச் சொல்லிக்கொண்டு சாம்ராஜ்யங்களைக் கோட்டை