Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

தகவல் அறியும் உரிமைச் சட்டம்


சோனியா காந்தி  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் முறையாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால் சோனியாவுக்கு என்ன நோய் என்றோ அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்றோ கூறப்படவில்லை.அதன் பின்னர் பிப்ரவரி 27ம் தேதி மீண்டும் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அமெரிக்கா வாழ் சீக்கியர்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்கான பணத்தை யார் கட்டியது என்று அமைச்சர் அம்பிகா சோனியிடம் கேட்கப்பட்டபோது, விரைவில் அறிவிக்கப்படும் என்றார். ஆனால் சொல்லவே இல்லை.

ஆனால் இப்போது  நரேந்திர மோடி  ரூ .1800 /- கோடி சோனியாவுக்கு செலவு செய்திருப்பதாக ஆதாரத்தைக் காண்பிக்கிறார் .எது உண்மைன்னு ஒண்ணுமே வெளங்கலியே ?
இந்த மாதிரியான தகவல்களை நாம்  பெற  உதவுவதே தகவல் அறியும் உரிமை சட்டமாகும் .
 


சொக்கத்தங்கம்யா இவங்க?


தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
சட்டம் எதற்கு?
அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.
எங்கிருந்து தகவல் பெறலாம்?
மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல் பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.
என்ன தகவல் பெறலாம்?


சோனியா என்னும் அரக்கி,கருணா எனும் எட்டப்ப துரோகி



சேனல் 4 ஆல் வெளியிடப்பட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் காணொளி பற்றி
என்ன சொல்ல?வார்த்தைகள் வரவில்லை,எழுதுவதற்கு. இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட போர்க்குற்ற காணொளி இதைவிடக் கொடுமையானது.

இதன் ஆரம்பம் எங்கே ஆரம்பித்தது,?

விடுதலைப்புலிகள் இயக்கம் 1975 ,மே 5 ஆம் நாள் தொடங்கப்பட்டது.இலங்கை விடுதலைக்குப் பிறகு மொழி,பல்கலைகழக இட ஒதுக்கீடு,தமிழர் பகுதியில் அரசுக் குடியேற்றங்கள் போன்ற காரணங்களால் தமிழர்களுக்கும்,சிங்களவர்களுக்கும் இடையே பிரச்சினை உருவெடுத்தது.
இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களை கவர்ந்து வந்தது. தொடக்கத்தில் இலங்கை காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் மீது சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வந்தனர்
.
1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் ஆல்பிரெட் துரையப்பா சுட்டுக் கொலை செய்யப்பட்டது புலிகளால் செய்யப்பட்ட முக்கிய தாக்குதலாக கொள்ளப்படுகிறது.பின் 1984 ல் சிதறி இருந்த இயக்கமாக இருந்த தமிழர் இயக்கங்கள் ஒன்றானது.

இந்திய ராணுவம் மூக்கை நுழைத்தது:

தமிழ்நாட்டில் ஈழத்திற்கு ஆதரவு பெருகியதால் இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்தில் உணவுப்பொட்டலங்களை வான்வழி வீசியதன் மூலம் இலங்கையின் உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒன்றிணைந்தனர் இரு நாட்டு ராணுவத்தினரும். 1987 ல் நடந்த ஒப்பந்தத்தின்படி ஈழப்போராளிகள் ஆயுதங்களை விட்டு சரணடைய இந்திய இலங்கை கூட்டுப் படைகள் அறிவித்தன.
ஆனால் போராளிகள் அதற்கு படியாமல், அக்டோபர் 8 ல் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலை செய்யக் காரணமும் இந்த ராணுவத்தினரின் அத்துமீறலால்தான்.
இதன்பிறகு பல தாக்குதல்கள் நடைபெற்று ராணுவத்தினரும்,புலிகளும் ப்ல்லாயிரக்கணக்கானோர் மாண்டு போயினர்.

2005 தேர்தல் .இலங்கையின் வடகிழக்கில் புலிகளால் தேர்தல் புறக்கணிக்கப்பட்டதால் கொடுங்கோலன் ராஜபக்‌ஷே சிறிதளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபராய் பொறுப்பேற்றார்,.புலிகள்
தேர்தலைப் புறக்கணித்ததால் தான் ராஜபக்‌ஷேவால் வெற்றி பெற முடிந்தது.தன் தலையில் தானே மண்ணை வாரித் தூற்றிக்கொண்டனர் புலிகள்.

இடைப்பட்ட காலங்களில் புலிகளின் சிறு சிறு தவறுகளால் வந்த வினைகள்தான் சேனல் 4 ன் இந்த வீடியோக் காட்சிகள்.
கருணா எனும் இந்த எட்டப்பன் புலிகளின் இயக்கத்திலிருந்து பிரிந்து


கத்ரீனா எங்கே?-க்ரவுனுக்கு அண்டர்,



தொலைக்காட்சிகளில் இப்பொழுதெல்லாம் விளம்பரங்களின் ஆக்கிரமிப்புதான்.
10 நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரங்கள்தான்.சரி இருந்துட்டுப் போகட்டும்.

இதைவிடக் காமெடி தொலைபேசி வழி நேரடி ஒளிபரப்பில் நம்மாளுக அரைமணி
நேரம் காத்திருந்து ,சரி லைன் கெடச்சு ”ஹலோ!நான் இன்னார் பேசறேன்.”
அப்படீன்னு சொல்லி முடிப்பதற்குள் அவளும் தங்கிலீஸ்ல,
“ஹலோ!யார் பேசறீங்க,சரியா ”கேக்கலை,உங்க டி.வி. வால்யூமக் கம்மி
பண்ணுங்க!”,இது தொகுப்பாளினி.
நம்மாளும் அசடு வழிஞ்சுட்டே ”நாந்தான் பேசறேன்,நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க,உங்க
வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு”அப்படீங்குவார்.
அவ என்னமோ தெருவுல போற பன்னிக்குட்டிய சொன்னமாதிரி


நாளை பொது வேலை நிறுத்தம்-தேவையா?



பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது,சில்லறை வர்த்தகத்தில்
நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது,மின்வெ(வே)ட்டு பிரச்சினை ,உள்ளிட்ட ப்ல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கலந்துகொள்வதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது என எதிர்பார்க்கப்படுகிறது. பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
கோவையைப் பொறுத்தவரை CODISSIA,AITUC, CITU, HMS, AIUTUC, TUCC, AICCTU, UTUC
உள்ளிட்ட தொழிற்சங்கள் முழு அடைப்புக்கு ஆதரவளித்துள்ளன.

Animated Social Gadget - Blogger And Wordpress Tips