Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

என்ன செய்யப்போகிறது இளைஞர் சமுதாயம் - கோ நம்மாழ்வார்


நன்றி : தினமலர்
(2011).

கிராமங்களைப் பற்றி பேசச் சொன்னால் பல் முளைக்கும் குழந்தை போல லயித்துச் சிரிக்கிறார் வேளான் ஞானி கோ.நம்மாழ்வார்.

“”எங்கள் கிராமத்து வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பி வழியும். சிறு வயதில் குட்டிக்கரணம் அடித்து குதூகலிப்போம் . வண்டிகளும், மாடுகளும் அதில்தான் இறங்கி ஏறும். பின் அங்கே பாலம் வந்தது.
கோடை காலத்தில் தண்ணீர் இல்லாத வெது மணலில் சடுகுடு ஆடினோம். இன்று வாய்க்காலில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை.
இருமருங்கிலும் நெல்லி, மா, நாவல் மரங்கள் இருந்தன. இன்று அவையெல்லாம் அருகிவிட்டன.
மாலை நேரங்களில் நிலா வெளிச்சத்தில் குழந்தைகள் ஓடியாடி விளையாடும். தாய் தகப்பனுடன் வீட்டின் திண்ணையில் அமர்ந்து குழந்தைகளின் சேட்டைகளைக் கண்டு ரசிப்பதோடு தங்களின் கஷ்ட நஷ்டங்களை அண்டை அயலாரோடு பகிர்ந்து, கூடி வாழ்ந்தார்கள்.

இன்பம் செழித்த மருத நிலமாகத் திகழ்ந்த மக்கள் வாழ்வு இன்று பாலையாகவே மாறிவிட்டது. இன்று ஏன் நினைவுகளின் நிழலைக்கூட அங்கு காணமுடிவதில்லை.



நிஞ்சா -நிச்சயம் மாஞ்சாதான்



ஜப்பானிய வரலாற்றில், நிஞ்சா (சிநோபி) என்பவர்கள் ஆட்கொலை, உளவு மற்றும் மரபுசாரா போர்க்கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்.






ஜப்பானியக் கலாசாரத்தில், நிஞ்சாக்கள் அபாயகரமான நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் பயிற்சி அளிக்கப்பட்டனர். அவர்களுடைய தோற்றம் சர்ச்சைக்கு உட்பட்டதாகவே உள்ளது.
இந்த கருத்து பற்றி நமக்கு யோசனை வேண்டாம் .

உலக அளவில் கவாஸாகி விற்பனை செய்து வரும் நிஞ்சா வரிசை ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு நிஞ்சா வரிசை பைக்குகளில் அவ்வப்போது மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், நிஞ்சா 650ஆர் பைக்கில் சில மாற்றங்களை செய்துள்ளது பஜாஜ் கீழ் செயல்படும் ஜப்பானிய நிறுவனமான கவாஸாகி. கூர்மையான முன்பக்க வடிவமைப்பு, புதிய பெட்ரோல் டேங்க், புதிய ஃபோம் இருக்கை மற்றும் பின்புற டேஞ்சர் விளக்குகள் 



சீனப் பெருஞ்சுவர் சேதம்


உலக அதிசயங்களின் பட்டியல்கள் புதிது, புதிதாக அவ்வப்போது வந்து கொண்டுதான் உள்ளன. ஆனாலும் என்றென்றும் உலக அதிசயமாக கருதப்படு வது சீன பெருஞ்சுவர்.



நிலவில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரே மனித படைப்பு என்ற பெருமையும் இதற்கு உண்டு. நாட்டின் பாதுகாப்புக்காக பிரம்மாண்ட மதில் சுவர் எழுப்புவது என்பது சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் ஐடியா. அவரது ஆட்சிக் காலத்தில்(கி.மு. 220-206) கட்டப்பட்டது.
இதன் சில பகுதிகள் மட்டுமே தற்போது சுவராக நீடிக்கிறது. அதன் பிறகு கி.மு. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16ம் நூற்றாண்டு வரை யில் பல்வேறு மன்னர்களின் காலக் கட்டத்தில் கட்டப்ப ட்டது. இடியும் நிலையில் இருக்கும் பகு திகளும் அவ்வப்போது புதுப்பிக் கப்பட்டு வந்தது.
இவ்வாறு கிழக்கே ஹெபேய் மாகாணம் ஷாங்ஹாய்குவானில் தொடங்கி மேற்கில் லோப்நுர் வரையில் பிரதான சுவர், கிளைச் சுவர் என சுமார் 8,850 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்டமாய் நீள்கிறது. மொத்த சுவரும் கற்கள், பாறைகளைக் கொண்டே அமைக்கப்பட்டதாக கருதப்பட்டு வந்தது. ஓக் மரத்தை யும் கல் போல பயன்படுத்தி சுவர் கட்டியிருப்பது தொல்பொருள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெருஞ்சுவர் கட்டிய மன்னன் 
இதுபற்றி லயோனிங் கலாசார நினைவுச் சின்னங்கள் அமைப்பு மற்றும் மேப்பிங் துறை அதிகாரி கள் கூறியதாவது:


அன்பு தெய்வம்


 எப்படி அடையாளம் காண்கிறாய்
         எத்தனை வருடங்கள் ஆனாலும் ,
               எவ்வளவு தூரம் போனாலும் ,
                                     நீ மறக்கவில்லை,

                நண்பர்களும் ,சொந்தங்களும்
              மறந்து போன என்னை
               நீ மறக்கவில்லை !



ஹிட்லரின் மறுபக்கமும் ,மரணமும்


சோவியத் ரஷ்யப்படைகள் ஜெர்மன் மீது படையெடுத்தது.ஜெர்மன் தலைநகரம் பெர்லின் மீது
சோவியத் படைகள் நிலைகொண்டு தன் வெற்றியை உறுதி செய்தது.
சோவியத் யூனியன் மீது மட்டும் ஹிட்லர் போர் தொடுக்காமல் இருந்திருந்தால் ஜெர்மனுக்கு
இந்த நிலைமை வந்திருக்காது.

1945 ஏப்ரல் 30 ஆம் தேதி அதிகாலை 2.30 மணி.ஹிட்லர் தன் மாளிகையில் உள்ள பாதாள அறையில்
தன் நண்பன் கோயபல்ஸ், மற்றும் தன் காதலி ஈவா பிரவுனுடன் பதுங்கியிருந்தார்.
தன் அறைக்கு அருகில் இருக்கும் தன் நண்பன் கோயபல்ஸை அழைத்தார் ஹிட்லர்.
ஹிட்லரின் அந்தரங்கச் செயலாளர் ப்ராஜூங்கேவுடன் இரண்டு முக்கிய ஆவணங்களை
தயார் செய்தார் ஹிட்லர்.
ஒன்று அவருடைய உயில்,மற்றொன்று அரசியல் ஏற்பாடு.உயிலை நிறைவேற்றும் பொறுப்பு மார்டின் போர்மன் என்பவரிடம் தரப்பட்டது.
1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர்.
எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம்


நாளை பொது வேலை நிறுத்தம்-தேவையா?



பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது,சில்லறை வர்த்தகத்தில்
நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது,மின்வெ(வே)ட்டு பிரச்சினை ,உள்ளிட்ட ப்ல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கலந்துகொள்வதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது என எதிர்பார்க்கப்படுகிறது. பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
கோவையைப் பொறுத்தவரை CODISSIA,AITUC, CITU, HMS, AIUTUC, TUCC, AICCTU, UTUC
உள்ளிட்ட தொழிற்சங்கள் முழு அடைப்புக்கு ஆதரவளித்துள்ளன.

தாஜ்மஹாலின் இருண்ட பக்கங்கள்-வெளிவராத மர்மங்கள்.



ஷாஜஹானின் ஆட்சியின் கடைசிகாலகட்டம் அது.ஔரங்கசீப் ஆட்சி அரங்கேறியது.

தன் தந்தையை சிறை வைத்தார் ஔரங்கசீப்.

ஆக்ரா கோட்டையில் எட்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்ட ஷாஜகானுக்கு மாற்று உடைகளும், எழுதும் உபகரணங்களும் மறுக்கப்பட்ட காலம்.அவர் அணிந்திருந்த ஆபரணங்களும் அகற்றப்பட்டன.

பூனை இளைத்தால் எலிக்குக் கொண்டாட்டம்என்னும் முதுமொழிக்கேற்ப ஷாஜகானை


காவலாளிகள் கூட மரியாதைக் குறைவாக நடந்து கொண்டனர்.
மகனான ஔரங்கசீப் மதித்தால்தானே காவலர்கள் மதிப்பதற்கு.

வெறுப்பின் உச்சகட்டத்திற்கு போன ஷாஜகானுக்கு பாலைவனச்சோலையாக இருந்தது தன் மகளான ஜஹனாராதான்.மகன் மதிக்காது போனாலும் தன் மகள் ஜஹனாராவாவது தமக்கு சிறையில் உதவியாய் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது ஷாஜகானுக்கு.

பெரும்பாலான பொழுதை தொலைவில் தெரியும் தன் காதல்மனைவியின் கல்லறையான தாஜ்மஹாலையே கண்ணிமைக்காமல் பார்த்து தன் நிலை எண்ணி கவலையுற்று,நோய்வாய்ப்பட்டார்.


புனித குர் ஆன் படிப்பதற்குமட்டுமே ஷாஜஹானுக்கு ஔரங்கசீப் அனுமதித்தார்.

(மகன் தந்தைக்கு ஆற்றும் செயல்).

கடைசிகாலத்தில் மறுபடியும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்த ஷாஜஹானால்,படுக்கையை விட்டு எழுந்து நடமாட முடியவில்லை.

அந்த நிலையிலும் தன் சகோதரியின் வேண்டுகோளுக்கிணங்கி ஔரங்கசீப் ,ஆளுயர கண்ணாடி ஒன்றை ஷாஜஹான் தாஜ்மஹாலை பார்க்கவசதியாக வைப்பதற்கு ஔரங்கசீப் அனுமதித்தார்.

ஜனவரி 22,1666 அன்று ஷாஜஹானின் எழுபத்து நாலாம் வயதில்,ஜஹனாரா பேகம் தன் தந்தையின் சிறைக்குள் நுழையும் நேரம்



மங்குனி அமைச்சர்?



1948 வாக்கில் நடந்த சம்பவம் இது:

ஒரு முறை ரயில்வே இலாகாவில் சரக்கு வேன்களுக்கு பற்றாக்குறை நிலவியது.
தகுதி அடிப்படையில் முன்னுரிமை வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்தது.
ஒரு தனியார் நிறுவனம் 50 வேன்களுக்கு ஒப்புதல் கோரியது.
ஆனால் அதில் ஒரு சிக்கல்,அது 50 வேன்களுக்கு ஒரு வேனுக்கு
ரூ 1000/- வீதம் 50 ஆயிரம் தர வேண்டும்.

அந்த நிறுவனமும் லஞ்சப் பணத்தைக் கொடுக்க ஒப்புக் கொண்டு முன்பணமாக ரூ 22 ஆயிரம் அமைச்சருக்கு கொடுத்தது.
கோப்பில் அமைச்சரும் "Approved" என்று எழுதிக் கையொப்பமிட்டார்.
கையெழுத்தானதை அறிந்த அந்நிறுவனம் மீதிப்பணத்தை தராமல் போக்குக் காட்டியது.
இதையறிந்த நம் அமைச்சர் சும்மா விடுவாரா?


உன்னால நான் கெட்ட,என்னால நீ கெட்ட-ஒரு அரசியல் நாடகம்.








(இது ஒரு கோபமான ஒரு அப்பாவித் தமிழனின் மனக் குமுறல்கள்)
நேற்றிலிருந்து விஜயகாந்த் ஒரு பரபரப்பானதொரு மனிதராய் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுதும் புகழ் பெற்றுவிட்டார்.
அனைவரையும் அவரைப் பற்றி பேசவைத்து, “நான் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருக்கிறேன்” என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார்.

நேற்று சட்டசபைக் கூட்டத்திலே எதிர்த்து கேள்வி கேட்டதற்காக ஒன்றுமில்லாத ஒரு சிறு பிரச்சினையை பூதாகரமாய் ஏற்படுத்திவிட்டார் சபாநாயகர்(கட்சி பாகுபாடற்ற ,பொதுவான ஒரு அ.தி.மு.க.காரர்,எல்லாக் கட்சிக்கும் பொதுவானவராம்,நம்புங்க!).

அ.தி.மு.க. அமைச்சர்கள் கை நீட்டி பேசியதால்தான் விஜயகாந்தும் கை நீட்டிப் பேசியுள்ளார்.
இதை அந்த காட்சியில் முழுதும் கவனித்தால் தெரியும்.
ஆனால் ஜெயா தொலைக்காட்சியில் விஜயகாந்த் வரும் காட்சியை மட்டுமே திரும்ப திரும்ப ஒளிபரப்புகிறார்கள்.



சைலென்ஸ் ப்ளீஸ்!



ஒரு முறை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் டாக்ஸிபிடித்து ஏறினார்கள் இரண்டு இளைஞர்கள்.டாக்ஸி ட்ரைவரோ வயதான ஒரு சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும்
இளைஞர்களுக்குக் கிண்டல் செய்யும் எண்ணம் வந்தது.அவர்கள் கேட்ட,படித்த சர்தார்ஜிகளை கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன.
அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக நிறைய சர்தார்ஜி ஜோக்குகளை வரும் வழியில் சொல்லிக்கொண்டே வந்தார்கள்.

ஆனால் சர்தார்ஜி ட்ரைவரோ ஒரு வார்த்தை கூடப் பதில் பேசவில்லை.
சில மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் இறங்கும் இடம் வந்தது.
அதற்குள் சர்தார்ஜியை ஏகப்பட்ட கிண்டல் அடித்துவிட்டனர் அந்த இளைஞர்கள்.

மீட்டரைப் பார்த்துக் காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி ,இளைஞர்களிடம், இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து,”தம்பி,நீங்க ரெண்டு பேரும் எங்களை நிறையக் கிண்டல் செய்தீங்க!,பரவாயில்லை, ஆனா எனக்காக ஒரே ஒரு காரியம் மட்டும் பண்ணுங்க!,இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பார்க்குற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்குப் போடுங்க ,,உங்களுக்குப் புண்ணியமாப்போகும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் சர்தார்ஜி.

அந்த இரண்டு பேருக்கும் ஒன்றும் புரியவில்லை,அவர்கள் அந்த நாணயங்களோடு செல்லும் இடங்களில் எல்லாம் பார்த்தார்கள்.
ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரர்களையும் பார்க்க முடியவில்லை,

அவர்களும் டெல்லியிலிருந்து கிளம்பும் நாள் வந்தது.
ரயில் நிலைய கார் ஸ்டேண்டில் அந்த சர்தார்ஜியைச் சந்தித்தனர்.
அந்த சர்தார்ஜி இளைஞர்களிடம் “என்ன தம்பி ! அந்த அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்குப் பிச்சை போட்டீங்களா?”என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் “இல்லை,ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரர்களையும் எங்களால் பார்க்க முடியவில்லை”என்றனர்.

அந்த சர்தார்ஜி அவர்களிடம் “ அதான் தம்பி சர்தார்ஜிங்க! உலகம் முழுக்க எங்களைக் கிண்டல் செய்றாங்க!,ஆனா நாங்க அதெல்லாம் பொருட்படுத்தறதேயில்ல,
எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் உழைப்பு மட்டுந்தான்.ரோட்டோரக் கடை வைப்போம்,லாரி ஓட்டுவோம்,மூட்டை தூக்குவோம்,
ஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம்,டெல்லியில ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரனையும் பார்க்க முடியாது” என்றார் சர்தார்ஜி,
அந்த இரண்டு இளைஞர்களும் அவர்களின் செயலுக்கு வெட்கித் தலை குனிந்தனர். பின் மன்னிப்பு கேட்டு விட்டு பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.



அடுத்தவரைக் கிண்டல் செய்வது தவறான ஒரு செயல்,முடிந்தவரை அடுத்தவர்களின் மனம் நோகாமல் இன்வார்த்தைகளைப் பேசுவோம்.
அடுத்தவர்களின் ஏளனப் பேச்சைக் கேட்காமல்,நம் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அந்த காரியத்தை செய்தால் நிச்சயம் வெற்றிதான்.
அடுத்தவர்கள் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி.



முள்வே(வ)லி முகாம்



வீடும் வாசலும், மண்ணும் மக்களும்,ஊரும் உறவும் இழந்து,நெஞ்சில் துளி உயிரும்,சுவாசிக்க கொஞ்சம் காற்றும் தவிர கையிருப்பு எதுவும் இல்லாத தமிழ் ஈழத்து மக்களை

இலங்கை அரசு எப்படி நடத்துகின்றது என்பதைப் பற்றித்தான் இங்கு பதிவிடப்போகிறேன்.

நிராயுதபாணிகளான சொந்த தேசத்து மக்களை ஒரே இடத்தில் ,கொட்டடியில் போட்டு பூட்டிய கொடுமை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.

இதை கொடுங்கோலன் ராஜபக்‌ஷே பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான போர்என்று காரணம் கூறியிருக்கிறான்.

அங்கு அடைக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு தராமலும்,காயத்திற்கு மருந்து

தராமலும்,சத்தமின்றி

ஒரு யுத்தம் நடந்திருக்கிறது.

அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களை வெளியில் விடுவித்தனர்,விட்டால் போதும் என்று வெளியேறிய தமிழர்கள்,அப்போது தங்களது சொந்த வீடுகளை இழந்திருந்தனர்.

விவசாய நிலங்கள் பிளாட் போடப்பட்டு விற்கப்பட்டிருந்தன.

மீன் பிடிக்க வலைகளும்,படகுகளும் சேதமாக்கப்பட்டிருந்தன.

இதற்கு முள்வேலி முகாமே நல்லதோ?” என்று நினைத்தார்கள் நம்மவர்கள்.

மேலும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களை கால்பதிக்கவே விடாமல் அலைக்கழித்தனர் இலங்கை அரசு அதிகாரிகள்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் நிருபர் ஒருவர் ,ஆளுங்கட்சி எம்.பி.அப்துல்

காதரிடம்

இன்னும் தமிழர்களை ஏன் முள்வேலி முகாமுக்குள் அடைத்துவைத்திருக்கிறீர்கள்?”

என்று கேட்டதற்கு அவரின் பொறுப்பான பதில்விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவே அப்படி செய்துள்ளோம்என்று சொன்னாராம்.

(ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்).

பல நாட்களுக்கு முன் சோனியாகாந்தி சென்னைக்

கடற்கரையில் இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல்


உரிமைகளை வழங்க வலியுறுத்துவோம்என்று சொல்லியிருந்தது பற்றி ராஜபக்‌ஷேவின்

கைக்கூலியான லஷ்மண் யாப்பாவிடம் கேட்டதற்கு

அப்படியா சோனியா சொன்னார்,எங்ககிட்ட சொல்லவே இல்லஎன்று வடிவேலு

மாதிரி காமெடி செய்திருக்கிறார் இந்த மதிகெட்ட அமைச்சர்.

இயற்கைக்கு முன் இவர்களும் பதில் சொல்லும் காலமும்

வரும்.

மேலும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களை போருக்குப் பின் இலங்கைக்குள்

அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள்.இதில் உலக சுகாதார நிறுவனமும்,ஐ.நா,சபையும்

அடக்கம்.

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் தூதரகத்தை அமைத்துவிட்டதாக முன்னாள் முதல்வரான கருணாநிதிக்கு பெருமையாகக் கடிதம் எழுதினார் நம் வெளியுறவுத்துறை அமைச்சர் S.M.கிருஷ்ணா.

இதில் இப்போது என்ன செய்து கிழிக்க இலங்கை சென்றார் என்று தெரியவில்லை.


சுமார் 30 ஆண்டுகாலப் போராட்டம் ,

மரண நாள் கண்ட முதியவர்கள்,பிள்ளைகளையும்,கற்பையும் இழந்த பெண்கள்,உடல் வற்றி எலும்பும் தோலுமாய் மரணத்தை நோக்கிய பிஞ்சுக்குழந்தைகள்,,,,,

கனவுகள் சிதைக்கப்பட்ட இளம்பெண்கள் மட்டுமே தமிழரிடம் அவர்களுக்கு வேண்டுமாம்.

சிங்களக் கருக்களை சுமக்கும் தமிழ் தாரகைகள்,

ஈழக்கனவுகளை இப்படியும் சிதைக்கிறார்களாம்.

உலகிற்கு நாகரிகத்தை உணர்த்திய தமிழர்கள் நாதியற்று போகிறோம்!.

போதும், இழந்தது,இழப்பதற்கு இனி உயிரைத்தவிர ஒன்றுமில்லை தமிழரிடம்.

இனி யாருக்கு வேண்டும் நாடும், நாடு கடந்ததும்?



உயிரா? காசா? ......... காசுதான்.



ரண்டு நண்பர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
மிகவும் பரபரப்பானதொரு சாலையது.இவர்களோடு இன்னும் பலர் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்களில் ஒருவன் திடீரென நின்று சற்று தொலைவில் உள்ள ஒரு புதர்ப்பக்கம் சென்றான்.
அங்கே ஒரு பூனைக்குட்டி ஒன்று முள்ளில் சிக்கி கத்திக்கொண்டிருந்தது.
அதனருகே சென்ற நண்பன்
புதரை விலக்கி அதனுள் சிக்கியிருந்த பூனைக்குட்டியை விடுவித்தான்.
பூனைக்குட்டி துள்ளிக் குதித்து ஓடியது.

இதைப்பார்த்த இன்னோர் நண்பனுக்கு ஆச்சரியம்!
”இத்தனை பேர் சாலையில் நடந்து செல்கிறோம்,ஆனால் இந்
சந்தடியில் யாருக்குமே பூனைக்குட்டியின் சத்தம் கேட்கவில்லை, உனக்கு மட்டும் எப்படி கேட்டது?” என்று வினவினான்.



அதற்கு பூனைக்குட்டியை காப்பாற்றியவன் பலமாக சிரித்தான்,”என்ன இந்த பூனைக்குட்டியின் சத்தம் இந்த சந்தடியில் கேட்கவில்லையா?”என்று கூறிவிட்டு


”சரி இப்போது பார்” என்று சொல்லிக்
கொண்டே தன் சட்டைப்பையிலிருந்து கொஞ்சம் சில்லரைக் காசுகளை எடுத்து தரையில் போட்டான்.

அந்த சில்லரை சத்தம் கேட்டதும் நடந்து சென்று கொண்டிருந்த மற்றவர்களல்லாம் திரும்பிப் பார்த்தனர்.

பின் பூனைக்குட்டியைக் காப்பாற்றியவன்
மற்றவனிடம் சொன்னான்”காசு சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தவர்கள் பூனைக்குட்டியின் சத்தத்திற்க்கு செவி சாய்க்கவில்லை பார்த்தாயா?
இதுதான் உலகம்.அவர்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே திரும்பிப் பார்ப்பார்கள்,இல்லையெனில் காணாதது போல் சென்றுகொண்டே இருப்பார்கள்.உதவும் மனப்பான்மை கூட ஏதோ
ஒன்றை எதிர்பார்த்தே செய்கின்றனர்,”
என்று சலித்துக்கொண்டான்.





(ஒரு கதை சொல்லி ஊரைத் திருத்தலாம்னு முடிவு!
அதான்! இப்படி சும்மா ஒரு கதை.)

இனி வரும் பதிவுகள் சிலவற்றில் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான மரங்கள் சிலவற்றின் சிறப்புகளை எழுதலாம் என்று உள்ளேன்,சரி அடுத்த பதிவில் பார்ப்போம்!



நம்புங்கள், நாம் தமிழர்தாம்!!!!





தமிழர் திருநாளாம்

பொங்கல்!

சொல்லிக்கொள்கிறார்கள்,


இயந்திர வாழ்க்கையில்

மறந்தே போய்விட்டொம்,

மாட்டையும் பொங்கலையும்,




காலையில் குளித்து

புத்தாடையுடுத்தி போலிப்புன்னகையில்

வாழ்த்துக்கள் சொல்லிக்கொ(ல்)ள்கிறோம்,



கோவில் செல்வோம்!,

தொலைக்காட்சி முன்பே படுத்துக்கிடக்கிறோம்!

புதுப் படங்கள் பார்க்கப் போகிறோம்,

காலம் ஓடுது, நாமும் ஓடுரோம்!



நிற்பதற்க்கும் நேரமில்லை,

நிதானித்தும் பார்க்கப்போவதுமில்லை,

பந்தமும் பாசமும் பொய்யாகிப்போச்சு!


காதலர்தினமும், முட்டாள்கள் தினமும்

பண்டிகையாகிப்போயின!

பிட்ஸாவும், பிரெட்டும் ,

உணவாகிப்போனது!.


மாடு சொல்லுது”அம்மா”ன்னு

தமிழர் மழலைங்க சொல்றாங்க ”மம்மி”ன்னு,

சொன்னாத்தானே பெருமை!



ஆடுபுலி ஆட்டமும்,கில்லியும்

இப்போ கிரிக்கெட்டும்,செஸ்ஸுமா மாறிப்போச்சு!,


நாம் வாழுறது அக்கம் பக்கத்துகாரங்களுக்கும்,

உறவுகளுக்கும் தானே!

நம் வாழ்க்கை நமக்காக இல்லை,நாலு பேருக்காகத்தான்!



தமிழர் பண்டிகைகள் இனிமேல் வளரும்!

நாம் கலாச்சாரத்தில் பின்பற்றும்

மேற்க்கத்தியர்கள் நம்மைப்

பின்பற்றுவதால்!

நம்புங்கள் நாம் தமிழர்தாம்!,,,





நல்லவேளை நாம் மறக்கவில்லை,

பொங்கலும்,தீபாவளியும்,

மறந்திருப்போம்,,,,,,,,,

விடுமுறையும், போனஸும் இல்லாதிருந்தால்!.



தலைவணங்குவோம்!

பாசத்திற்கு அடிமையாகாதவர்கள் இருக்க முடியாது.அப்படி ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் முற்றும் துறந்த முனிவராகத்தான் இருக்க முடியும்.
ஆனால் ஒரு அரசியல்வாதி அதுவும் ஒரு மாநிலத்தின் முதல்வர் அப்படி இருந்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம் அவர்தான் நம் கர்மவீர
ர் “காமராஜர்”.


காமராஜர் முதல்வராய் இருந்த சமயம்,அவரின் தாயார் சிவகாமி அம்மையார் தெருவில் உள்ள ஒரு குழாயில் சென்று தண்ணீர் பிடிப்பார்.எழுபது வயதிற்கும் அதிகமான ஒரு தாய்,அதுவும் முதல்வரின் அம்மா தெருக்குழாயில் சென்று தண்ணீர் எடுப்பதைப் பார்த்த அதிகாரிகள் அந்த அம்மாவின் வீட்டிற்கு ஒரு குடிநீர் குழாய் அமைத்துக் கொடுத்தார்கள்.

ஒரு நாள் காமராஜர் தன் தாயாரைப் பார்க்க விருதுநகர் வீட்டிற்கு சென்றார்.புதிதாக குடிநீர்க் குழாய் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார்.
‘அம்மா யாரிந்தக் குழாயை வச்சா?’ என்று கேட்டார்.
‘என்னால உடம்புக்கு முடியல...அதனால முனிசி்பாலிட்டிக்காரங்க வச்சாங்க’ என்று அவரின் அம்மா கூறினார்.

காமராஜர் உடனே அவர்களுக்கு போன் பண்ணி அவர்களை வரச் சொன்னார்.
‘என்ன இது....?என் அம்மாவிற்கு மட்டும் தனி வசதி.இதை உடனே அகற்றி விடுங்கள். இனி இதுபோல் நடக்கக் கூடாது’ என்று எச்சரித்தார்.


அதோடு’அம்மா.... நமது ஊரில் நம்மைப்போன்ற சாதாரண மக்கள் எப்படி தண்ணீர் பிடிக்கிறார்களோ அப்படித்தான் நாமும் ஊர்க்குழாயில் தண்ணீர் பிடிக்கவேண்டும்’ என்று தாயாருக்கே பாச உத்தரவு போட்டார்.



கோடிகோடியாய் பணம் சேர்க்கும் இன்றைய அரசியல்வாதிகளிடம் காமராஜர் குன்றென நிமிர்ந்து நிற்கிறார்.காமராஜரின் பாச உணர்வும்,தியாக மனப்பான்மையும்,கடமையில் எள்ளளவும் தவறாத பண்புள்ளம் கொண்ட இவரைப் போன்றவரை இனி நாடு காணுமோ?


Animated Social Gadget - Blogger And Wordpress Tips