ஜப்பானிய வரலாற்றில், நிஞ்சா (சிநோபி) என்பவர்கள் ஆட்கொலை, உளவு மற்றும் மரபுசாரா போர்க்கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்.
ஜப்பானியக் கலாசாரத்தில், நிஞ்சாக்கள் அபாயகரமான நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் பயிற்சி அளிக்கப்பட்டனர். அவர்களுடைய தோற்றம் சர்ச்சைக்கு உட்பட்டதாகவே உள்ளது.
இந்த கருத்து பற்றி நமக்கு யோசனை வேண்டாம் .
உலக அளவில் கவாஸாகி விற்பனை செய்து வரும் நிஞ்சா வரிசை ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு நிஞ்சா வரிசை பைக்குகளில் அவ்வப்போது மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், நிஞ்சா 650ஆர் பைக்கில் சில மாற்றங்களை செய்துள்ளது பஜாஜ் கீழ் செயல்படும் ஜப்பானிய நிறுவனமான கவாஸாகி. கூர்மையான முன்பக்க வடிவமைப்பு, புதிய பெட்ரோல் டேங்க், புதிய ஃபோம் இருக்கை மற்றும் பின்புற டேஞ்சர் விளக்குகள்
என வடிவமைப்பில் மாற்றங்கள் கண்டு மேலும் கவர்ச்சியாக மாறியுள்ளது நிஞ்சா 650ஆர்.
எஞ்சினை பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே பொருத்தப்பட்டிருக்கும் 72 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் அதே எஞ்சின்தான். ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படலாம் என யூகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் டிஜிட்டல் மீட்டர் ஆயில்,பெட்ரோல் ,பேட்டரி ஆகியனவற்றின் நிலைகளைக் காட்டுகின்றது.
ஸ்ப்ளிட் சீட்டுடன் ,கடிகாரம் தாங்கிய ஸ்பீடோ மீட்டர்கள் நம்மைக் கவர்கின்றன .
லைம் ,கருப்பு ,வர்ணங்களில் பஜாஜ் ஷோரூம்களில் கிடைக்கும் .மேலும், முந்தைய மாடலைவிட ரூ.50,000 கூடுதல் விலையில் புதிய நிஞ்சா 650ஆர் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இதனால், ரூ.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை கொண்டதாக இருக்கும் புதிய 2012 நிஞ்சா 650ஆர். மேலும், ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கும் பட்சத்தில் நிஞ்சா 650ஆர் விலை ரூ.30,000 மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு.
Ex-Showroom Price
* Delhi. May vary.
0 comments:
Post a Comment