இனி வரும் காலங்களில் ஒவ்வொரு மரங்களின் தன்மை,மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.முதலாவதாய் வருவது அரச மரம்தான்.
”அரசு இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது நம் முன்னோர் மொழி.அரசமரத்தின் உதிர்ந்த இலைகளைக் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் விளைச்சல் எடுக்கலாம்.ஒரு வருடத்திற்கு 1 டன் முதல் 4 டன் இலைகளை உதிர்க்கும் இந்த அரச மரம்,மழை மேகங்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை.மேலும் அதிகளவு ஆக்ஸிஜன் வாயுவை தரும் மரமும் இதுவே
இதனால்தான் நம் முன்னோர்கள் இதனை கோவில்களில் நட்டு,108 தடவை சுற்றி வரச் செய்தார்கள்.அப்படி சுற்றி வரும்போது கார்பன் -டை -ஆக்ஸைடை அதிகளவு உட்கிரகித்து கொண்டு,உடம்புக்குத் தேவையான பிராண வாயுவை நமக்கு அளிக்கிறது.
புத்தருக்கு ஞானம் அளித்த இந்த அரச எனும் போதி மரம்,விசுவாமித்திர முனிவருக்கும் காயத்ரீ ஞானம் பிறந்தது.கி,மு,288 காலங்களில் அசோகர் ஸ்ரீலங்கா மன்னருக்கு புத்த மதத்தின் பரிசாய் அனுப்பியிருக்கிறார்.இதனால் அரசமரத்தடியில் புத்ததுறவிகள் கூடும் மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
காந்திஜியும்,நேருவும் அரச மரங்களை நட்டனர்,.இன்னும் கிராமங்களில் மக்கள் கூடும் சந்தைகளும்,விசேடங்களும் அரச மரத்தடியில்தான்.கிராமங்களில் அரச மரம் ஆணாகவும்,வேம்பு பெண்ணாகவும் சித்தரித்து திருமணம் செய்விப்பார்கள்.குழந்தை பேறு உண்டாக்கும் மருந்துகள்,சுற்றி வரும்போது ஏற்படும் வேதியல் மாற்றங்களால்,பிணி நீங்குதல்,மூல நோயை குணப்படுத்துதல்,என்று இதன் மருத்துவகுணங்கள் ஏராளம்.