Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

மரங்கள்-நம் மருத்துவர்கள்

இனி வரும் காலங்களில் ஒவ்வொரு மரங்களின் தன்மை,மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.முதலாவதாய் வருவது அரச மரம்தான்.
”அரசு இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது நம் முன்னோர் மொழி.அரசமரத்தின் உதிர்ந்த இலைகளைக் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் விளைச்சல் எடுக்கலாம்.ஒரு வருடத்திற்கு 1 டன் முதல் 4 டன் இலைகளை உதிர்க்கும் இந்த அரச மரம்,மழை மேகங்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை.மேலும் அதிகளவு ஆக்ஸிஜன் வாயுவை தரும் மரமும் இதுவே
இதனால்தான் நம் முன்னோர்கள் இதனை கோவில்களில் நட்டு,108 தடவை சுற்றி வரச் செய்தார்கள்.அப்படி சுற்றி வரும்போது கார்பன் -டை -ஆக்ஸைடை அதிகளவு  உட்கிரகித்து கொண்டு,உடம்புக்குத் தேவையான பிராண வாயுவை நமக்கு அளிக்கிறது.
புத்தருக்கு ஞானம் அளித்த இந்த அரச எனும் போதி மரம்,விசுவாமித்திர முனிவருக்கும் காயத்ரீ ஞானம் பிறந்தது.கி,மு,288 காலங்களில் அசோகர் ஸ்ரீலங்கா மன்னருக்கு புத்த மதத்தின் பரிசாய் அனுப்பியிருக்கிறார்.இதனால் அரசமரத்தடியில் புத்ததுறவிகள் கூடும் மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
காந்திஜியும்,நேருவும் அரச மரங்களை நட்டனர்,.இன்னும் கிராமங்களில் மக்கள் கூடும் சந்தைகளும்,விசேடங்களும் அரச மரத்தடியில்தான்.கிராமங்களில் அரச மரம் ஆணாகவும்,வேம்பு பெண்ணாகவும் சித்தரித்து திருமணம் செய்விப்பார்கள்.குழந்தை பேறு உண்டாக்கும் மருந்துகள்,சுற்றி வரும்போது ஏற்படும் வேதியல் மாற்றங்களால்,பிணி நீங்குதல்,மூல நோயை குணப்படுத்துதல்,என்று இதன் மருத்துவகுணங்கள் ஏராளம்.




மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர்.
இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

• செய்கை -விதை -மலம் இளக்கி,
• இலை கொழுந்து -உடல் வன்மை பெருக்கும்,சூலகத்தை உண்டாக்கும் ,கருப்பை கொலரை போக்கி -சூல் கொள்ள செய்யும் -அதனாலே "அரச மரத்தை சுற்றி விட்டு அடி வயிற்றை தொட்டு பார்த்தாள்" என்ற பழ மொழியும் உண்டு

• இலை கொழுந்தை பாலில் அவித்து சர்க்கரை சேர்த்து உன்ன -காய்ச்சல் தணியும்-முப்பிணி தணியும் 
• வித்தை -தக்க அளவில் சேர்க்க மலச்சிக்கல் போகும் ,குரல் வறட்டல் நீங்கும் -பசி தீ பெரும் 
• பட்டியை பொடித்து சாம்பாலாக்கி தர விக்கல் நிற்கும் 
• பட்டை தூளில் கழுவ -சொறி சிரங்கு குணமாகும் -புண் ஆறும் 
• இம்மரத்தில் வளரும் புல்லுருவியின் இலையை அரைத்து பிள்ளை பேறு இல்லா பெண்களுக்கு எலுமிச்சை பழம் அளவக்கு சூதகதிர்க்கு முன்பு சாப்பிட சூல் அமையும் 
• இம்மரப்பாலை -பதத்தில் தடவ பித்த வெடிப்பு மாறும்


அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு நம்பிக்கை. இதன் காரணமாகவே “அரசினை நம்பி புருசனை கைவிட்டாள்" என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளளது. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது
'அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் "என்ற பழமொழி உண்டு. இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப் பேற்றை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே. அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.


கருப்பை கோளாறு
அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


இதனால்தான் கிருஷ்ண பரமாத்மா,பகவத்கீதையில் “மரங்களில் நான் அரச மரம்” என்று கூறியிருப்பாரோ?



0 comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips