இந்த வருட ipl வெகு விமரிசையாக ஆரம்பித்துவிட்டது.
எப்படியென்றால்
ஈழத்துக்காக மாணவர் போராட்டம் கைவிடப்பட்டது,
ஸ்டெர்லைட் ஆலை விவகாரப் போராட்டமும் கைவிடப்பட்டது,.
மகாராஷ்ட்ராவில் எவ்வளவு பஞ்சம் இருந்தாலும் ,கிரிக்கெட் மைதானத்திற்கு தண்ணீர் கொடுத்தே தீர்வார்கள்.!
இதனால் வருமானமும் கணிசமாகக் கிடைக்கும்.
இது ”Indian premier league” என்பது சந்தேகமாக இருக்கிறது.
”இலங்கை,ஆஸ்திரேலியா ப்ரீமியர் லீக்” என்று பெயர் மாற்றியிருக்கலாம்.
பாவம் கருணாநிதி, நானும் ஈழத்துக்கு உண்ணாவிரதம் இருக்கிறேன்,என்று ஆடிய நாடகத்தை யாரும் நம்பவில்லையே.
தாத்தா ஈழத்துக்குப் போராடுவார்,பேரன்கள் இலங்கை வீரருக்கு கோடி கோடியாய் கொடுத்து, கேப்டனாக்குவார்களாம்.
அப்பன் பகை?,பிள்ளை உறவு,? நடத்துங்க! நடத்துங்க!
இதைவிட மகாராஷ்ட்ராவில் நடக்கும் கூத்து?அய்யோ? அய்யோ?
நாட்டு மக்களின் கதி?
“மங்குனி அமைச்சரே!நாட்டு மக்கள் முக்கியமா?
இல்லை வெளிநாட்டு இனாம் முக்கியமா?”
இனாம் தான் முக்கியம்.எவன் எக்கேடு கெட்டா நமெக்கென்ன!
நம்ம ipl மேட்ச் பார்ப்போம்.நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவோம்.
0 comments:
Post a Comment