Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

வீரப்பன் ஒரு ராபின் ஹூட்

வீரப்பன் 
இந்தப் பெயரைக் கேட்டால் யார் நடுங்குகிரார்களோ இல்லையோ அரசு அதிகாரிகள் நடுங்குவார்கள் .
சத்தி வனப்பகுதியைப் பொறுத்தவரை  வீரப்பன் ஒரு ராபின் ஹூட் மாதிரி .
கர்நாடகம்  வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதும் ,சுருட்டிக் கொண்ட தனது  வாலை
நம் காதுக்குள் விட்டு ஆட்டுகிறது .
வீரப்பனை எதிர்மறையாக பலர் உணர்ந்தாலும், வீரப்பன் வாழ்ந்த காட்டிற்கு அருகே இருக்கும் கிராம மக்கள் தங்கள் காவல் தெய்வமாகத்தான்  வீரப்பனைப்  பார்த்தார்கள்.
பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்களை முறையற்ற வகையில் களவாடி அதை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து வாழ்வு நடத்திய ஏழைகளின் பங்களான் எனப்படும் ராபின் ஹூட்டின்
 சாயலில் வீரப்பனின் நடவடிக்கைகள் இருந்தது .
வீரப்பனின் மறைவுக்குப்பின் அளவுக்கு அதிகமாக செல்வங்களை சேமித்து வைத்து இருந்தார் என எந்த செய்தியும் இல்லாத அளவுக்கு அவர் உண்மையிலேயே ஏழைப்பங்காளனாக இருந்திருக்கின்றார்.

நக்கிரன் ஆசிரியர் பல நேரங்களில் வீரப்பனை நேரடியாக சந்தித்து மக்களுக்கு வீரப்பன் பற்றிய செய்திகளை உண்மையாக எழுதினார்.

வீரப்பனின் தாக்கத்தால் தமிழக திரைப்படங்களில் பலவும் காட்டிற்குள் வில்லன் இருப்பதைப் போன்று சித்தரித்து வீரப்பனை ஞாபகம் செய்தன.
கேப்டன் பிரபாகரன் படத்தில் வருமளவுக்கு வீரப்பன் ஒன்றும் மோசமானவர் அல்ல.
 விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்கள் வீரப்பனை காவல்துறை பிடிக்காதது குறித்தான நகைச்சுவையில் ஈடுபட்டார்கள்.
ஏழைகளாய் இருந்திருந்தால் அவர்களுக்கும் இவரின் மகிமை தெரிந்திருக்கும்.
குளிர்காற்றில் உட்கார்ந்து கொண்டு எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.








வீரப்பனின் மரணத்திற்கு பின்பே வெகுஜன மக்களுக்கு வீரப்பனின் மகிமை தெரிந்தது. இப்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இணைத்து வீரப்பனை கொண்டாடுகின்றார்கள். அவர் சமாதிக்கு சென்று பல இயக்கங்கள் வீர வணக்கம் செய்கின்றன.

இறந்த தினம்:
அக்டோபர் 18 ,2004
நன்றி :விக்கிபீடியா 


0 comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips