சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக தூத்துக்குடிக்கு 8 பேர் சென்றோம்.திருமணம் முடிந்து வரும் வழியில் எதேச்சையாகத்தான் கட்டபொம்மன் கோட்டை நுழைவாயிலைப் பார்த்தோம்.
பின் அங்கு சென்று வரலாம் என்று எல்லோரும் சென்றோம்.
- வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் நாம் ஐந்து வளைவுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். முதலில் தெரிவது ஊமைத்துரை நுழைவாயில்.
2. இதைக் கடந்து மேலும் சற்று தூரம் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இரண்டாவது நுழைவாயில் தென்படுகின்றது. இதற்குப் பெயர் வெள்ளையத்தேவர் நுழைவாயில்.
3. இதைக் கடந்து மேலும் சற்று தூரம் சென்ற பின்னர் நம்மை வரவேற்பது தானாபதிப் பிள்ளை தோரணவாயில்.
4. இதற்கு அடுத்தார் போல் சற்று தூரத்தில் அமைந்திருப்பது சுந்தரலிங்கம் தோரணவாயில்.
5. இதனைக் கடந்து மேலும் பயணித்துக் கொண்டிருக்கும் போது நம்மை வரவேற்பது வீரசக்கம்மாள் தோரணவாயில்.
இந்த ஐந்து தோரண நுழைவாயில்களையும் கடந்து செல்லும் போது சற்று தூரத்திலிருந்தே வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுக் கோட்டை தெரிகின்றது.
இவ்வளவு அழகாக ஒரு சிறு கோட்டை போல இந்த மண்டபம் இருக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்து தூக்கிலிட்ட பிறகு அவர் கட்டிய மாளிகை ஆங்கிலேய அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்பகுதி பிறகு வெறும் மணல் மேடாகக் கிடந்தது. இந்த இடத்திற்குப் பக்கத்தில் அந்த சண்டையின் போது இறந்து போன பன்னிரண்டு ஆங்கிலேய வீரர்களுக்கும் ஆங்கிலேய அரசாங்கத்தால் கல்லறை கட்டப்பட்டது. அதில் அந்த ஆங்கிலேய வீரர்களின் பெயர்கள் குறிப்புக்கள் ஆகியவை சேர்க்கப்பட்டு இப்பகுதி ஆங்கிலேயர்கள் காலத்திலேயே நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.
போகும் வழியும் குண்டும் குழியுமாக உள்ளது.
கால தாமதம் ஆனதால் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்துக்குச் செல்ல முடியவில்லை.
இன்றைய நிலையில் குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
மேலும் கூட்டம் குறைவாக இருப்பதால் ,இளஞ்ஜோடிகள் பணத்தை கொடுத்து
அதிக அளவில் வருகின்றனர்.
இதை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்..இல்லையெனில் ஒரு மாவீரன் கோட்டை லாட்ஜ் ஆக மாறிவிடும்...
0 comments:
Post a Comment