ஒரு போலியான வாழ்க்கை எல்லோரிடதிலும் உள்ளது.அதைப் பற்றி
முகத்தில் அணிந்திருக்கும் அறிவு ஜீவி முகமூடியைக் களைந்து விட்டு, எந்த வித போலித்தனமுமில்லாமல் அர்த்தங்களற்று பேசித்திரிய மனது விரும்புகின்றது.நகர வாழ்க்கையின் வெம்மை என்னை கொஞ்ச கொஞ்சமாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது! நின்று நிதானித்து கடந்த சில நாட்களாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று திரும்பிப் பார்த்தால் ஒன்று மட்டுமே புரிந்திருக்கின்றது. நான் வெறுமனே ஓடிக் கொண்டிருந்திருக்கின்றேன். இனிமேலும் வெறுமனே ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டும் என்று நகரம் எனக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றது. “மச்சான் நான் இப்போ மீட்டிங்ல இருக்கேண்டா அப்புறமா பேசறேன். சாரி” என்று சொல்லி விட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் மறுபடி வேலைகளுக்குள் மூழ்கி விட எனக்கு எளிதில் பழக்கப் பட்டு விட்டது. அன்றைய நாளின் மிகப்பெரிய சந்தோஷமாய் பயணித்த பேருந்தில் கூட்டமில்லாமலிருந்ததை சொல்லித் திரிந்து கொண்டிருக்கின்றேன்.யோசித்துப் பார்க்கையில் எல்லாமே அர்த்தமற்றதாய் தென்படுகின்றது. அலுவலகத்தினுள்ளே நுழையும் போதே ஒரு முகமூடி அணிந்து கொள்வது எல்லாருக்கும் அவசியமாகி விட்டது.. தன்னுடைய நடை, உடை, பேச்சு எல்லாவற்றிலுமே போலிப்பூச்சுக்களை தேடித் தேடி பூசிக் கொள்ளுகின்றோம். வேலைகளிற்கு நடுவில் ரிலாக்ஸ் செய்வதற்காக பேசும் பேச்சில் கூட நம்முடைய அறிவுத் திறமையை வெளிப்படுத்த தயார் செய்து கொண்டிருக்கின்றோம்.அமெரிக்கா, பில்கேட்ஸ், சேகுவேரா, மார்க்ஸ், ஈழத் தமிழர்கள், இந்து பேப்பர், ஷேக்ஸ்பியர் கவிதைகள், ஜாஸ் மியூசிக், மடோனா லேட்டஸ்ட் ஆல்பம் இவையனைத்தும் நம்முடைய அறிவை நிர்ணயிக்கும் அளவுகோல்களாகிப் போனது.பரந்து பட்டிருக்கும் கூட்டத்தில் இவை எல்லாவற்றையும் பற்றிப் பேசத் தெரிந்தவன் “அறிவாளி” என்ற லேபிளை சுமப்பவனாய் மாறிப் போகின்றான்.