Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

என்ன விலை இந்த உயிர் ?

ஒரு வாரத்திற்கு முன் நடந்த சம்பவமிது.
மாலை 5.30 மணி இருக்கும்.சூரியனின் அந்தி நேர ஒளிக்கீற்றுகள்
மரங்களின் வழியே சாலையில் மின்னிக் கொண்டிருந்த்து.
சாலையில் நானும் ,எனது நண்பரும் இரு சக்கர வாகனத்தில் வந்து
கொண்டிருந்தோம்.
பேருந்துகளும்,கனரக வாகனங்களும்,இன்னும் சில எமனின் ஏஜண்ட்டுகளும்
எங்களை விலக்கிக் கொண்டு முந்திச் சென்றன.
எந்தவொரு வாகனமும் மிதவேகமாகச் சென்றிருக்காது.எல்லாமே
மிகவேகம்தான்.
எங்களை கடந்து சென்ற ஒரு மினி ஆட்டோ ,சாலையில் ஒரு எட்டுப் போட்டு சென்றது.
“ஒருவேளை R.T.O பாத்துட்டு இருப்பாரோ?,இவனுக்கு லைசென்ஸ் கொடுப்பதற்கு?என்று கமெண்ட் அடித்துக்கொண்டு வந்தோம்,நானும்,நண்பரும்,
அப்பொழுதுதான் ஒரு பூனைக்குட்டியொன்றை சாலையில் கண்டோம்.
அது எக்குத்தப்பாக வந்து சாலையின் நடுவே வந்து மாட்டிக்கொணடது
புரிந்தது.

ஒருவேளை தன் விளையாட்டுப் புத்தியால் வந்து மாட்டியிருக்கலாம்,
இல்லை ஏதாவது துரத்தி,ன் உயிரைக் காப்பத்திகொள்வதற்காகக் கூட
இருக்கலாம்.
தன் தாயைத் தேடித் திரியலாம்,.
எதுவாக இருந்தாலும் வந்து மாட்டிக்கொண்ட்து.
நானும்,நண்பரும் அவசரமாக வந்துவிட்டதால்,பல அடி தூரம் வந்த பிறகுதான் நண்பரும்,நானும் அந்தப் பூனைக்குட்டியையே கவனித்தோம்.
காப்பாற்றவேண்டும் என்கிற .எண்ணம் வந்ததே தவிர செயலில் இறங்கவில்லை.
இந்தக் கலியுகதர்மத்தின் பிடியில் நாங்கள் மட்டும் தப்பமுடியுமா என்ன?உதவியும் செய்யல ஒரு மண்ணாங்கட்டியும் செய்யல.
எங்களுக்குப் பின் வரிசையாக வாகனங்கள் வந்தபடியே இருந்தன.
வெகு தூரம் வரும்வரை அந்தக் குட்டியைக் கவனித்துக் கொண்டே வந்தார் நண்பர்.




எங்கள் கண்பார்வையிலிருந்து மறையும்வரை எல்லா வாகனங்களையும்,எளிதாக சமாளித்துவிட்ட்து அந்தக் குட்டி.
நாங்கள் வந்து சேரும்வரை அந்தப் பூனைக்குட்டியின் நிலை பற்றிப் பேசிக்கொண்டு வந்தோம்.
ஒரு நிமிடம் வண்டியை ஓரங்கட்டிவிட்டு ,அதைக் காப்பாற்றியிருக்கலாம்.
அப்படிச் செய்யாமல் விட்டுவிட்டு,பின் நம்மால் வருத்தம் மட்டும் தானே பட முடியும்.
எங்களுக்குப் பின்னால் வந்த யாராவது ஒரு புண்ணியவான் ,அதை காப்பாற்றியிருப்பார் என நினைக்கிறேன்.
மறுமுறை அந்த வழியில் வரும்போது ,அந்த இடம் வந்தவுடன் சாலையில்
எதாவது ,பூனைக்குட்டியின் சடலம் கிடக்கிறதா?
அதன் உடல் சாலையோடு ஒட்டிப் போய் உள்ளதா?என்று
கவனித்தேன்.
நல்லவேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை.அந்தக் குட்டிக்கு ஆயுள்பல்ம் அதிகம்.
சாலையோடு ஒட்டிக்கிடக்கும் நாயோ,வேறு ஏதாவது உயிரனத்தின்
உடலைப் பார்க்கும்போது இப்படித்தான் எண்ணத்தோன்றுகின்றது.“உயிரோடு இருக்கும் காலத்தில் உணவு உண்டாக
வேண்டும் என்று எவ்வளவு பசியோடு திரிந்திருக்கும்.
ஆனால் இப்போது ஒரு காட்சிப்பொருளாக.,எல்லோரும் வேடிக்கை
பார்த்துச் செல்லும்படியாக அது சாலையோடு ஒட்டிக் கிடக்கிறது.
அதே சாலையில் மனிதர்கள் அடிபட்டுக் கிடந்தால் 108 க்கு
கூப்பிடும் செல்லிடைப் பேசிகள்.,,,,ஒரு நாயோ,பூனையோ அடிபட்டு
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் ஏன் அழைப்பதில்லை?
அப்படியே அது இறந்து கிடந்தாலும் யாரும் அதை அடக்கம் செய்வதில்லையே?
இப்படிப் பல கேள்விக்கணைகளை அந்தப் பூனைகுட்டி எனக்குள்
ஏவியது.
“பூனைக்குட்டியைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டோமேஎன்கிற குற்ற உணர்ச்சி என்னை அன்று முழுதும் வாட்டியது.
எப்படியோ கடவுளோ?இல்லை சூப்பர்மேன்,ஸ்பைடர் மேனாகக் கூட இருக்கலாம்,அந்தப் பூனைக்குட்டியை காப்பாற்றியது.
எப்படியோ அது காப்பாற்றப்பட்டுவிட்ட்து.எப்படியும் அது ஒருநாள் இறக்கத்தான் செய்யும்.ஆனால் ஏன் இப்பொழுது ,நம் கண் முன்னால்,அதுவும் சாலையோடு சாலையாய்,தாரோடு தாராய் அதன் உடல் ஒட்டிக்கொள்ளும் படி ஏன் இறக்க வேண்டும்?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு அது காப்பாற்றப்பட்டது பதிலாய்ப்போனது.
இனிமேல் இப்படி எதுவும் நடக்க்க்கூடாது,அப்படி நடந்தாலும் அவற்றைக் காப்பாற்றி விட வேண்டும் என்று தீர்மானித்தேன்.
அடுத்த இரு தின்ங்களிலேயே கோவை-திருச்சி சாலையில்
நாயொன்றின் உடல் சாலையோடு ஒட்டிகொண்டிருந்ததைக் கண்டேன்.
வாகனங்களும் எவ்வித சலனமும் இன்றித் தன்வழியே போய்க்கொண்டிருந்தன,.
அந்த சாலை இன்னமும் பரபரப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நான் மட்டும் என்ன ஸ்பைடர் மேனா? இல்லை காப்பாற்றும் சக்திமானா?
நானும் இரக்கங்களை இயந்திர வாழ்க்கையில் மறந்து போன இயந்திரத்தனமான வாழ்க்கை வாழும் ரோபோ தான்.
காப்பாற்றுவது எல்லாம் சூப்பர் ஹீரோ வேலைஎன்று போலி எண்ணத்தோடு வாழ்க்கை வாழும் சராசரி கேவலமான மனிதன் தான்.
டி.வி யும் ,வேலையும் ,சாப்பாடு இவை தவிர வேறெதுவுமே தெரியாத இந்த வாழ்க்கையில் இரக்கம் என்ன விலை இந்த கலியுகத்தில்?
சரி ரொம்பவும் யோசிக்க வேண்டாம்,கலியுகம் பற்றியும்,அதில் என்னவெல்லாம் நடக்கும் என்று கோரக்கர் என்ற சித்தர் சொன்னதும் அடுத்த மற்றுமொறு பதிவில்.


0 comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips