சேனல் 4 ஆல் வெளியிடப்பட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் காணொளி பற்றி என்ன சொல்ல?வார்த்தைகள் வரவில்லை,எழுதுவதற்கு. இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட போர்க்குற்ற காணொளி இதைவிடக் கொடுமையானது.
இதன் ஆரம்பம் எங்கே ஆரம்பித்தது,?
விடுதலைப்புலிகள் இயக்கம் 1975 ,மே 5 ஆம் நாள் தொடங்கப்பட்டது.இலங்கை விடுதலைக்குப் பிறகு மொழி,பல்கலைகழக இட ஒதுக்கீடு,தமிழர் பகுதியில் அரசுக் குடியேற்றங்கள் போன்ற காரணங்களால் தமிழர்களுக்கும்,சிங்களவர்களுக்கும் இடையே பிரச்சினை உருவெடுத்தது.
இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களை கவர்ந்து வந்தது. தொடக்கத்தில் இலங்கை காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் மீது சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வந்தனர்
.
1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் ஆல்பிரெட் துரையப்பா சுட்டுக் கொலை செய்யப்பட்டது புலிகளால் செய்யப்பட்ட முக்கிய தாக்குதலாக கொள்ளப்படுகிறது.பின் 1984 ல் சிதறி இருந்த இயக்கமாக இருந்த தமிழர் இயக்கங்கள் ஒன்றானது.
இந்திய ராணுவம் மூக்கை நுழைத்தது:
தமிழ்நாட்டில் ஈழத்திற்கு ஆதரவு பெருகியதால் இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்தில் உணவுப்பொட்டலங்களை வான்வழி வீசியதன் மூலம் இலங்கையின் உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒன்றிணைந்தனர் இரு நாட்டு ராணுவத்தினரும். 1987 ல் நடந்த ஒப்பந்தத்தின்படி ஈழப்போராளிகள் ஆயுதங்களை விட்டு சரணடைய இந்திய இலங்கை கூட்டுப் படைகள் அறிவித்தன.
ஆனால் போராளிகள் அதற்கு படியாமல், அக்டோபர் 8 ல் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலை செய்யக் காரணமும் இந்த ராணுவத்தினரின் அத்துமீறலால்தான்.
இதன்பிறகு பல தாக்குதல்கள் நடைபெற்று ராணுவத்தினரும்,புலிகளும் ப்ல்லாயிரக்கணக்கானோர் மாண்டு போயினர்.
2005 தேர்தல் .இலங்கையின் வடகிழக்கில் புலிகளால் தேர்தல் புறக்கணிக்கப்பட்டதால் கொடுங்கோலன் ராஜபக்ஷே சிறிதளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபராய் பொறுப்பேற்றார்,.புலிகள்
தேர்தலைப் புறக்கணித்ததால் தான் ராஜபக்ஷேவால் வெற்றி பெற முடிந்தது.தன் தலையில் தானே மண்ணை வாரித் தூற்றிக்கொண்டனர் புலிகள்.
இடைப்பட்ட காலங்களில் புலிகளின் சிறு சிறு தவறுகளால் வந்த வினைகள்தான் சேனல் 4 ன் இந்த வீடியோக் காட்சிகள்.
கருணா எனும் இந்த எட்டப்பன் புலிகளின் இயக்கத்திலிருந்து பிரிந்து இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட்டான்.
துரோகி கேணல் கருணா என்று அழைக்கப்படும் சிறிலங்காவின் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான | |
உதவிகளை வழங்குவதற்காக மட்டுமே தமது உறுப்பினர்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தான். புலிகளின் பல ரகசியங்கள் இந்த கருணா எனும் துரோகியால் ராணுவத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. | . |
இதிலிருந்தே புலிகளின் அழிவு ஆரம்பம் என்றே சொல்லலாம்.
பின் இலங்கை தன் அண்டை நாடான இந்தியா மற்றும் சீனா,பாகிஸ்தான், போன்ற நாடுகளின் உதவியுடன் புலிகளுடன் போரிட்டு அவர்களின் முடிவை உறுதிப்படுத்தியது.
மேலும் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது மகனையும் சுட்டுக் கொன்றார்கள்.
இந்திய ராணுவத்தின் பங்கு இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.ஏனெனில் அவர்களால்தானே போரில் இலங்கை வெற்றி பெற முடிந்தது.
இந்தியாவின் இழிந்த எண்ணமும் ,தமிழ்நாட்டினரின் மௌனமும்:
சோனியாகாந்தியின் பழிவாங்கும் எண்ணமும் இதில் மேலோங்கியிருந்தது.
எங்கே தன் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்றெண்ணி கருணாநிதியும் ராஜினாமா நாடகத்தை மட்டும் நட்த்திவிட்டு மௌனமாய் இருந்துவிட்டார் இந்த தமிழை வாழ வைப்பவர்.
இது ”நீ ராஜினாமா செய்வது மாதிரி நடி ! நான் சொன்னதும் கைவிட்டுவிடு” என்பது மாதிரி இருக்கிறது.ஆனால் இதே கருணாநிதி ஆட்சி இல்லாத இப்போது தன் M.L.A. பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
ஏன் இந்த திடீர் ஞானோதயம்?அன்று எங்கே போனது இந்த ஞானம்?
“ எங்கோ இலங்கையில் குண்டு வெடித்து உயிரிழந்தால் நமக்கென்ன! நம் தமிழ்நாடு-அமைதிப்பூங்கா! நாம்தான் பாதுகாப்பாய் இருக்கிறோமே?பிறகெதற்கு நாம் எங்கோ இருக்கும் தமிழர்களுக்காக கவலைப்படணும்,போராடணும்,உதவணும்?
நமது கட்சிக்கு இதன் மூலம் இடைத்தேர்தல்ல ஓட்டு கிடைக்கும்”
நம் அரசியல் தலைகள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவளிக்கும் தலைகள் ஆகியோரின் எண்ணங்கள் இப்படித்தான் இருக்கிறது.
சோனியா எனும் இத்தாலிப் பெண்(பேன்)100 கோடி பேர் கொண்ட ,அரசியல் தலைவர்களே இல்லாத?இந்தியாவில் ஆட்சி செய்கிறாள்.நம் நாட்டில்தான் தலிவருகளுக்குப் பஞ்சம் போல இருக்கு.
அதற்கு நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் கூட்டணி தர்மத்துக்காக தன் இனத்தவர்களையே அழிக்கிறார்கள்.
தன் இனம் திண்ணும் பிணம் திண்ணிகள் வாழும் பூமியிது!.
அதை எதிர்த்துப் போராடும் சிலரையும் சிறையில் வைத்து சிறப்பிப்பார்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்.
இன்று ஈழத்திற்கு நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.
அன்று நாம் உணர்வோம் ”அஹிம்சையா? பயங்கரவாதமா?”
காந்திஜியா?நேதாஜியா?”எனும் போது அஹிம்சை அவர்களிடம்(சோனியாவும்,காங்கிரஸும்) எடுபடாது.
பயங்கரவாதம் தான் தீர்வு எனும் போது தமிழ்நாடும் தனிநாடாகும்.
”மெல்ல தமிழ் இனிச் சாகும்” நம் அரசியல் சாக்கடைப் பன்னிகளால்.
யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் அவர்களை!
சங்கரன்கோவிலில் எல்லோரும் நாட்டுக்கு உருப்படியான பிரதிநிதிக்கு வாக்கு சேகரிக்கிறார்கள்!
அவர்கள் எல்லோருக்கும் நேரம் கிடைக்காது, இது பற்றிப் பேச ,
மானாட மயிலாட பார்ப்பதற்கும்,கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்கும்தான் நேரமிருக்கிறது,....
பாவம் அவர்கள் என்ன செய்ய முடியும் இந்த வேலைப்பளுவில்!!!!!!!!!!!!
SO DON"T DISTURB.
இந்தப் பெண் யார்? நிலாப்பெண்ணுக்கு /// கட்டதொரைக்கு கட்டம் சரியில்லை :)
ReplyDeleteரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பு
ReplyDelete