பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது,சில்லறை வர்த்தகத்தில்
நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது,மின்வெ(வே)ட்டு பிரச்சினை ,உள்ளிட்ட ப்ல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கலந்துகொள்வதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது என எதிர்பார்க்கப்படுகிறது. பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
கோவையைப் பொறுத்தவரை CODISSIA,AITUC, CITU, HMS, AIUTUC, TUCC, AICCTU, UTUC
உள்ளிட்ட தொழிற்சங்கள் முழு அடைப்புக்கு ஆதரவளித்துள்ளன.மேலும் திருப்பூரிலும் பின்னலாடை நிறுவனங்கள்,மற்றும் அதன் சார்ந்த தொழில்களான
பிரிண்டிங்,டையிங்,எம்ப்ராய்டரி, உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தொழிலகங்கள்
வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்போகின்றன.
வங்கிகள்,இன்சூரன்ஷ் நிறுவனங்கள், போன்றவைகளும் வேலை நிறுத்ததில்
ஈடுபடுவதால் நாளை(பிப்ரவரி 28) இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்,.
எண்ணெய் நிறுவனங்களும் பந்தில் கலந்து கொள்வதால்,நாளை பெட்ரோல்
பங்குகளுக்கும் விடுமுறையாக இருக்கலாம்.
மத்திய அரசு வழக்கம்போல் இதைக் கண்டும் காணாதது போலத்தான்
நடந்து கொள்ளப்போகிறது.
தொழிற்சங்கங்களும் மாதா மாதம் வேலை நிறுத்தம் செய்துகொண்டுதான்
இருக்கிறார்கள்.அவர்களும் செவி சாய்த்தமாதிரி தெரியவில்லை.
இருப்பதோ 4 மணிநேர வேலைதான்.அதையும் வேலைநிறுத்தம் செய்தால்
இந்த நிலைமையில் இந்த வேலை நிறுத்தம் தேவைதானா?.வேலைக்கு செல்வோரின் பாடு படு திண்டாட்டம்தான்.
பிரதமர் ஏதாவது வெளிநாட்டுக்கு பயணம் போய்டுவாரா??........
எது எப்படியோ நாளை ஒரு நாள் விடுமுறை.?
0 comments:
Post a Comment