Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

உன்னால நான் கெட்ட,என்னால நீ கெட்ட-ஒரு அரசியல் நாடகம்.








(இது ஒரு கோபமான ஒரு அப்பாவித் தமிழனின் மனக் குமுறல்கள்)
நேற்றிலிருந்து விஜயகாந்த் ஒரு பரபரப்பானதொரு மனிதராய் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுதும் புகழ் பெற்றுவிட்டார்.
அனைவரையும் அவரைப் பற்றி பேசவைத்து, “நான் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருக்கிறேன்” என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார்.

நேற்று சட்டசபைக் கூட்டத்திலே எதிர்த்து கேள்வி கேட்டதற்காக ஒன்றுமில்லாத ஒரு சிறு பிரச்சினையை பூதாகரமாய் ஏற்படுத்திவிட்டார் சபாநாயகர்(கட்சி பாகுபாடற்ற ,பொதுவான ஒரு அ.தி.மு.க.காரர்,எல்லாக் கட்சிக்கும் பொதுவானவராம்,நம்புங்க!).

அ.தி.மு.க. அமைச்சர்கள் கை நீட்டி பேசியதால்தான் விஜயகாந்தும் கை நீட்டிப் பேசியுள்ளார்.
இதை அந்த காட்சியில் முழுதும் கவனித்தால் தெரியும்.
ஆனால் ஜெயா தொலைக்காட்சியில் விஜயகாந்த் வரும் காட்சியை மட்டுமே திரும்ப திரும்ப ஒளிபரப்புகிறார்கள்.

 சன் டி.வி.யும்,கலைஞர் டி.வி.யும் ,சட்டமன்றத் தேர்தலின் போது தன் கட்சி வேட்பாளரை அடித்தார் ”என்று ஒரு சிறு சம்பவத்தைப் பெரிய ஒரு ஃப்ளாஷ் நியூஸாக ஒளிபரப்பினார்கள்.

சட்டப்பேரவை என்பது மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வேண்டுமே ,தவிர அவர்களின் சொந்தப் பிரச்சினைகளைப் பேசக் கூடாது.

இது “உன்னால நான் கெட்ட,என்னால நீ கெட்ட”கதை மாதிரி ,
ஒரு பக்கம் தலைக்கணம் கொண்ட ஜெ “விஜயகாந்துடன் கூட்டணி வைத்துக்கொண்டதற்கு நான் வெட்கப்படுகிறேன்”.

இன்னொரு பக்கம் “அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்துக் கொண்டதற்காக நான் வெட்கப்படுகிறேன்”
இது பாக். தீவிரவாதிககிட்டவே தமிழ்ல்ல பேசும் கேப்டன் விஜயகாந்த்.

இது எதோ குழாயடி சண்டை மாதிரி இருக்கு.
யாருக்குத் தேவையா வெச்சீங்க கூட்டணி.
மக்களுக்கு நல்லது பண்றதுக்கு எத்தனை போட்டி. சந்தோஷமாயிருக்கு போங்க!

சட்டப்பேரவையில் குடிகாரர் என்று சர்வாதிகாரி ஜெ.வால் விமர்சிக்கப்பட்ட விஜயகாந்தும் ஏதோ சினிமாவில் வரும் வில்லனிடம் வசனம் பேசுவதுபோல் கை நீட்டிப் பேசுகிறார்.

ஒரு மாநிலத்தின் முதல்வர் தன் கட்சிப் பிரச்சினையை சட்டப்பேரவையில் பேசுகிறார்.
விலைவாசிப் பிரச்சினையையும்,மின்சாரப் பிரச்சினையையும் பற்றி கவலைப்படாத ஜெயலலிதா
கை நீட்டிப் பேசிவிட்டாராம், இது ஒரு பிரச்சினையா?
வடிவேல் சொல்ற மாதிரி “சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு”.
மக்கள் பிரச்சினை பற்றி ஆக்கப் பூர்வமான திட்டங்கள் ஏதுமில்லை.
சட்டப்பேரவையில்தான் இத்தனை அக்கப்போர்கள்.

இந்தப் பிரச்சினை மூலம் ஜெ,மற்றும் விஜயகாந்துக்கு பைசா செலவில்லாமல் விளம்பரம்.
இது தவிர விஜயகாந்துக்கு மத்தியில் பா.ஜ.க , தமிழகத்தில் தி.மு.க.. போன்ற கட்சிகள் கூட்டணிக்கே அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சில வருடங்களுக்குப் பிறகு இதே கூத்தாடிகள் கூட்டணி வைத்தாலும் , இதை மறந்திட்டு ஓட்டுக் கேட்க வந்தாலும் வருவாங்க.

இதன் மூலம் தே.மு.தி.க. வின் ரேட்டிங் எகிறிவிட்டது.
இந்த நாடகத்தின் மூலம் வழக்கம் போல ”ஏமாறப்போவது மக்களாகிய நாம்தான்” என்ற ஒன்று மட்டும் விளங்குகிறது.ஏனெனில்அரசியலில் தான் “நிரந்தர நண்பர்களுமில்லை,பகைவர்களுமில்லையே”..


எப்படியோ இந்தப் பிரச்சினையின் மூலம் ,இதற்கு முன்னர் நடந்த பிரச்சினைகளை மக்கள் மறக்கவே, ஜெ,மற்றும் கறுப்பு எம்.ஜி.ஆர்.என்று தன்னை சொல்லிக்கொள்ளும் விஜயகாந்த் ஆகிய இந்த இரு கலைக்கூத்தாடிகளால் இந்த கபட நாடகம் நடத்தப்படாமல் இருந்தால் நல்லது.






0 comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips