Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

மனிதனைக் கெடுப்பவை இவைகள்!

மனிதர்களைக் கெடுப்பவை இவை மூன்றும் தான்:

1. மறதி

2. மடி (சோம்பல்)

3. துயில் (தூக்கம்)

முதலில்” “மறதியைப் பற்றி:

நான் யார்?என்ற ஞாபகம் இல்லாமை.அதனால்தான் உடம்பாகிய கூட்டை

தானாகவே எண்ணிக்கொண்டோம்.ஐம்புலன்களால் உலகை

அனுபவிக்க அலைகிறோம்.கணநேரம் தோன்றும் வானவில் போன்ற வாழ்க்கைக்கு

மனம் அலைகிறது,. நிரந்தரமற்றதை நிரந்தரமாக்க எண்ணுகிறோம்..

அப்போதைக்குக் கிடைக்கும் அற்ப சுகத்துக்காக பேராசையில் பெரிதாகப்

பாடுபட்டு அயர்ச்சி அடைகிறோம், ஆன்மாவை மறந்தோம்.இதிலெங்கே

இறைவனவனை நினைப்பது.அதனாலே சம்சாரத்தில் வீழ்கிறோம்,

ஆசை என்ற சங்கிலியால் பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ளோம்.

ஆனால் மறதியும் வேண்டும்,ஆனாலும் மறதி மட்டும் இல்லையெனில் இன்று நம்மில் பலர்

பைத்தியமாக அலைய வேண்டியிருக்கும். மறதியே வாழ்க்கையாகக் கூடாது.

ஏனெனில்”” “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சல்லவா?

அடுத்து “மடிஎன்னும் சோம்பல் பற்றி:

செயலில்லாமல் முடங்கிக் கிடத்தல் ஒருவனைக் கெடுக்கிறது. செயலூக்கமில்லா

நிலையும்,செத்த நிலையும் ஒன்றே.பொறுமை என்ற பெயரில்,

சகிப்புத்தன்மை என்ற சாக்கில், இன்றும் பலர் செயல்படாமல் தங்களின் திறமைக்கு

சாவு மணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.போதை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கேட்டால் சமாதான புறாக்களை பறக்க விடுவதாகச் சொல்லிக்கொண்டு சாம்ராஜ்யங்களைக் கோட்டை

விட்டுக்கொள்கிறார்கள்.நாளைக்கு,நாளைக்கு என்று எந்த வேளையும்

(வேளா வேளைக்கு சரியாக சாப்பிடுவார்கள் ,

என்னைமாதிரி ஹி,ஹி,ஹி.........)

செய்யாமலும்,செய்யவிடாமலும்,விளையாட்டைக் கூட வினையாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களால் எதையும் வாங்க முடியாது, ஏங்க மட்டுமே முடியும்.

இவர்கள் எதற்கும் உதவ முடியாத ஒன்றே.

மூன்றாவதாய் தூக்கம்:

ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்தால் தூக்கம்.தூக்கத்தினால் செய்ய நினைக்கும் செயல்களை

மறந்து விடுகிறோம்.தூங்கிப் பழகியவனைச் சோம்பல் விடுவதில்லை.

“பகலில் தூங்குபவன் வீட்டில் பாம்புப் புற்று வளரும் என்கிறது பழமொழி.

இதற்கு அறிவியல் பூர்வமாகவும்காரணம் இருக்கலாம்.

மறதி.(பகல்)தூக்கம்,சோம்பல் இவைகளை விட்டொழிந்தாலே வாழ்க்கையில் ஒரு

மனநிம்மதி பிறக்கும்..




0 comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips