1948 வாக்கில் நடந்த சம்பவம் இது:
ஒரு முறை ரயில்வே இலாகாவில் சரக்கு வேன்களுக்கு பற்றாக்குறை நிலவியது.
தகுதி அடிப்படையில் முன்னுரிமை வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்தது.
ஒரு தனியார் நிறுவனம் 50 வேன்களுக்கு ஒப்புதல் கோரியது.
ஆனால் அதில் ஒரு சிக்கல்,அது 50 வேன்களுக்கு ஒரு வேனுக்கு
ரூ 1000/- வீதம் 50 ஆயிரம் தர வேண்டும்.
அந்த நிறுவனமும் லஞ்சப் பணத்தைக் கொடுக்க ஒப்புக் கொண்டு முன்பணமாக ரூ 22 ஆயிரம் அமைச்சருக்கு கொடுத்தது.
கோப்பில் அமைச்சரும் "Approved" என்று எழுதிக் கையொப்பமிட்டார்.
கையெழுத்தானதை அறிந்த அந்நிறுவனம் மீதிப்பணத்தை தராமல் போக்குக் காட்டியது.
"Approved"க்கு முன்னால் "Not" என்று எழுதி வைத்தார்.செய்தியறிந்த அந்நிறுவனம்
அலறியடித்துக் கொண்டு அமைச்சரிடம் மீதிப்பணத்தை கொடுத்தது.
மகிழ்வடைந்த அந்த அமைச்சர் அடித்தல் திருத்தல் இன்றி அந்தக் கோப்பில்
"not" க்குப் பின்னால் "e" யைச் சேர்த்து
"note:Approved" என்று எழுதி அவர்களிடம் கொடுத்தார்.
இதுதான் அறிவார்ந்த ஊழல் எனலாம்.
எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா?
நம் அறிவை இந்த மாதிரி விஷயங்களுக்கு பயன்படுத்தாமல் நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்தினால் இந்தியா முன்னேறும்.
0 comments:
Post a Comment