Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

சேது சமுத்திரம்,சீனாவின் படையெடுப்பு





ராமர் பாலம் விவகாரம் பிரச்சினைகள் நாளுக்குநாள் பெரும் பிரச்சினையாகலாம்.பழமை விரும்பியான கலைஞர் கருணாநிதி,தமிழினக் காவலனான இவர் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார்.
ராமர் பாலம் இருப்பதற்கான செயற்கைக்கோள் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் நாசா வெளியிட்டும் அமெரிக்காவின் கைப்பாவையான நம் பொம்மை பிரதமரும்,சோனியாவும் ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்.நம் நாட்டினர்கள் சொன்னால் நம்பாத இவர்கள்
இவர்களின் முதலாளிகளான அமெரிக்கா சொல்லியும் ஏற்க மாட்டேங்குறாங்க?


இந்த சாட்சி மட்டும் போதாதாம்.நீதிமன்றத்தில் ”ராமர் பாலம் இருந்ததற்கான சாட்சி இல்லை” என்று வாதிட்டிருக்கிறார்கள்.


இதற்காக ராமர் பாலம் கட்டிய வானரங்களும்,அணிலும் தான் வரவேண்டும் சாட்சி சொல்வதற்கு.இவர்கள்
ராமர் பாலத்தின் வரலாறு சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும்.

நம் பிரதமர் மட்டும் சொன்னதையே சொல்வாரே”எனக்குத் தெரியாதே”!....
ராமரின் கால்தடம் பதித்த கல் கூட ராமேஷ்வரத்தில் இன்னமும் சுற்றுலா செல்பவர்கள் காணலாம்.
அவர் என்ன தனக்குத்தானே பாராட்டுவிழா நடத்தி தன் கால் சின்னத்தைப் பதித்து வைத்தாரா?
எது உண்மை?????

இது ஒருபுறம் இருந்தாலும் “சேது சமுத்திரம் திட்டத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும்”
என்று மத்திய அரசு வாதிட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த திட்டத்தை நிறைவேற்றும் பட்சத்தில் சீனாவுக்கு படையெடுக்க வசதியாகப் போய்விடும்.இலங்கையின் உதவியுடன் நம் நாட்டை சுற்றிவளைத்துவிடுவார்கள்.ஏற்கனவே நம் கடற்படையினர் ரோந்து செல்வது நடக்காத ஒன்று.மீனவர்களைச் சுடும் இலங்கைப்படையினரைத் தட்டிக்கேட்க இயலாதவர்கள்,.இத்தாலி கப்பல் வந்து இந்தியர்களைச் சுட்டபின்பும் விழித்துக்கொள்ளாதவர்கள் நம் கடற்படையினர்.
அப்படியும் சேது திட்டம் நிறைவேற்றினாலும்,கடற்படையை வலுவாக்க வேண்டும் .இல்லையெனில் தமிழகம் சீனாவின் ஒரு அங்கமாகிவிடும்..



2 comments:

  1. please go to visit, http://www.youtube.com/watch?feature=player_embedded&v=LVcTh-x9bu8

    ReplyDelete

Animated Social Gadget - Blogger And Wordpress Tips