ஒரு முறை மன்னன் நெப்போலியனுக்குச் (நம்ம நடிகரில்லீங்க)
செல்வந்தர்கள் ஒரு பெரிய விருந்து வைத்தார்கள்.
ஒரு பெண்மணி விலையுயர்ந்த நகைகளைத் தலை முதல்
பாதம் வரை அணிந்திருந்தாள்.
அந்தக் கூட்டத்திலேயே அதிகமான நகை அணிந்தவள் அவள்தான்.
எல்லோர் பார்வையும் அவளின் நகைகள் மீதே விழுந்தது.
நெப்போலியனும் அவளைப் பார்த்துவிட்டு
தன் மெய்க்காப்பாளனிடம் “யார் இந்தப் பெண்?”என்று கேட்டார்.
அதற்கு அவன் “இவர் புகையிலை வியாபாரியின் மனைவி”,
என்று பதிலளித்தான்.
மறுநாளே நெப்போலியன் “புகையிலை
தொடர்பான வியாபாரங்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்படும்” என்று சட்டம் கொண்டு வந்தார்.
(எதுக்கு இந்த விளம்பரம்,அளவாக நகையைப் போட வேண்டியதுதானெ!),..
உடம்பு சரியில்லேன்னாலும் உங்களையெல்லாம்
நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னுதான் இந்த
ஒரு சின்ன தத்துவமான கதை(ஹி,ஹி....)
0 comments:
Post a Comment