இளைஞர்களுக்குக் கிண்டல் செய்யும் எண்ணம் வந்தது.அவர்கள் கேட்ட,படித்த சர்தார்ஜிகளை கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன.
அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக நிறைய சர்தார்ஜி ஜோக்குகளை வரும் வழியில் சொல்லிக்கொண்டே வந்தார்கள்.
ஆனால் சர்தார்ஜி ட்ரைவரோ ஒரு வார்த்தை கூடப் பதில் பேசவில்லை.
சில மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் இறங்கும் இடம் வந்தது.
அதற்குள் சர்தார்ஜியை ஏகப்பட்ட கிண்டல் அடித்துவிட்டனர் அந்த இளைஞர்கள்.
மீட்டரைப் பார்த்துக் காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி ,இளைஞர்களிடம், இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து,”தம்பி,நீங்க ரெண்டு பேரும் எங்களை நிறையக் கிண்டல் செய்தீங்க!,பரவாயில்லை, ஆனா எனக்காக ஒரே ஒரு காரியம் மட்டும் பண்ணுங்க!,இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பார்க்குற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்குப் போடுங்க ,,உங்களுக்குப் புண்ணியமாப்போகும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் சர்தார்ஜி.
அந்த இரண்டு பேருக்கும் ஒன்றும் புரியவில்லை,அவர்கள் அந்த நாணயங்களோடு செல்லும் இடங்களில் எல்லாம் பார்த்தார்கள்.
ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரர்களையும் பார்க்க முடியவில்லை,
அவர்களும் டெல்லியிலிருந்து கிளம்பும் நாள் வந்தது.
ரயில் நிலைய கார் ஸ்டேண்டில் அந்த சர்தார்ஜியைச் சந்தித்தனர்.
அந்த சர்தார்ஜி இளைஞர்களிடம் “என்ன தம்பி ! அந்த அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்குப் பிச்சை போட்டீங்களா?”என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் “இல்லை,ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரர்களையும் எங்களால் பார்க்க முடியவில்லை”என்றனர்.
அந்த சர்தார்ஜி அவர்களிடம் “ அதான் தம்பி சர்தார்ஜிங்க! உலகம் முழுக்க எங்களைக் கிண்டல் செய்றாங்க!,ஆனா நாங்க அதெல்லாம் பொருட்படுத்தறதேயில்ல,
எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் உழைப்பு மட்டுந்தான்.ரோட்டோரக் கடை வைப்போம்,லாரி ஓட்டுவோம்,மூட்டை தூக்குவோம்,
ஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம்,டெல்லியில ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரனையும் பார்க்க முடியாது” என்றார் சர்தார்ஜி,
அந்த இரண்டு இளைஞர்களும் அவர்களின் செயலுக்கு வெட்கித் தலை குனிந்தனர். பின் மன்னிப்பு கேட்டு விட்டு பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அடுத்தவரைக் கிண்டல் செய்வது தவறான ஒரு செயல்,முடிந்தவரை அடுத்தவர்களின் மனம் நோகாமல் இன்வார்த்தைகளைப் பேசுவோம்.
அடுத்தவர்களின் ஏளனப் பேச்சைக் கேட்காமல்,நம் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அந்த காரியத்தை செய்தால் நிச்சயம் வெற்றிதான்.
அடுத்தவர்கள் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி.