நாம் தினந்தோறும் பல பேரை சந்திக்கின்றோம்,ஆனால் நம் நினைவில் நிற்பவர்கள் எத்தனை பேர்? ,அப்படி எல்லோர் நினைவிலும் நிற்கும் அதுவும் திரைத்துறையில் இருந்தவர் பற்றி காண்போம்.
அவர்தான் நம் மனதில் “தருமி”யாக வாழும் நாகேஷ் அவர்கள்!
1933 ஆம் வருடம் தாராபுரத்தில் பிறந்த நாகேஷ்(இயற்பெயர்:கிருஷ்ணராவ் குண்ட்டுராவ்,) சென்னையில் பயின்று இந்தியன் ரயில்வேயில் கிளர்க் ஆக பணியாற்றியவர்.
பின் திரைத்துறையில் நுழைந்து தனெக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் நாகேஷ்.இவர் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல ,சிறந்த குணச்சித்திர நடிகர் என்று உலகிற்கு காட்டியது “சர்வர் சுந்தரம்” திரைப்படம் தான்.
இவ்ர் சிவாஜி,எம்.ஜி.ஆர்,ஜெமினி,முத்துராமன்,எஸ்.எஸ்.ஆர்.,ரஜினி,கமல், போன்றோருடன் மட்டுமின்றி இளைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜித்,தனுஷ்,சிம்பு போன்றவர்களுடனும் நடித்துள்ளார்.
எல்லோரையும் விட கமலுடன் நல்ல நட்பு கொண்டிருந்தார்,”நம்மவர்” திரைப்படத்துக்காக தேசிய விருது கிடைத்தது.கமலின் அனைத்து படங்களிலும் கண்டிப்பாக நாகேஷ் நடித்திருப்பார்.
இவரின் கடைசித் திரைப்படம் “தசாவதாரம்”.
கடைசி காலத்தில் தன் மகனான நடிகர் ஆனந்த்பாபுவைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார்.
இப்படிபட்ட நகைச்சுவை உலகின் மன்னன், எல்லோரையும் சிரிக்க வைத்த இவர் “தியாகிகளின் தின”மான ஜனவரி 30,2009 ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.
அவர் மறைந்தாலும் அவர் நினைவுகள் நம்மிடையே வாழ்ந்து கொண்டே இருக்கும்.
0 comments:
Post a Comment