பாசத்திற்கு அடிமையாகாதவர்கள் இருக்க முடியாது.அப்படி ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் முற்றும் துறந்த முனிவராகத்தான் இருக்க முடியும்.
ஆனால் ஒரு அரசியல்வாதி அதுவும் ஒரு மாநிலத்தின் முதல்வர் அப்படி இருந்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம் அவர்தான் நம் கர்மவீர
ர் “காமராஜர்”.
காமராஜர் முதல்வராய் இருந்த சமயம்,அவரின் தாயார் சிவகாமி அம்மையார் தெருவில் உள்ள ஒரு குழாயில் சென்று தண்ணீர் பிடிப்பார்.எழுபது வயதிற்கும் அதிகமான ஒரு தாய்,அதுவும் முதல்வரின் அம்மா தெருக்குழாயில் சென்று தண்ணீர் எடுப்பதைப் பார்த்த அதிகாரிகள் அந்த அம்மாவின் வீட்டிற்கு ஒரு குடிநீர் குழாய் அமைத்துக் கொடுத்தார்கள்.
ஒரு நாள் காமராஜர் தன் தாயாரைப் பார்க்க விருதுநகர் வீட்டிற்கு சென்றார்.புதிதாக குடிநீர்க் குழாய் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார்.
‘அம்மா யாரிந்தக் குழாயை வச்சா?’ என்று கேட்டார்.
‘என்னால உடம்புக்கு முடியல...அதனால முனிசி்பாலிட்டிக்காரங்க வச்சாங்க’ என்று அவரின் அம்மா கூறினார்.
காமராஜர் உடனே அவர்களுக்கு போன் பண்ணி அவர்களை வரச் சொன்னார்.
‘என்ன இது....?என் அம்மாவிற்கு மட்டும் தனி வசதி.இதை உடனே அகற்றி விடுங்கள். இனி இதுபோல் நடக்கக் கூடாது’ என்று எச்சரித்தார்.
அதோடு’அம்மா.... நமது ஊரில் நம்மைப்போன்ற சாதாரண மக்கள் எப்படி தண்ணீர் பிடிக்கிறார்களோ அப்படித்தான் நாமும் ஊர்க்குழாயில் தண்ணீர் பிடிக்கவேண்டும்’ என்று தாயாருக்கே பாச உத்தரவு போட்டார்.
கோடிகோடியாய் பணம் சேர்க்கும் இன்றைய அரசியல்வாதிகளிடம் காமராஜர் குன்றென நிமிர்ந்து நிற்கிறார்.காமராஜரின் பாச உணர்வும்,தியாக மனப்பான்மையும்,கடமையில் எள்ளளவும் தவறாத பண்புள்ளம் கொண்ட இவரைப் போன்றவரை இனி நாடு காணுமோ?
Tweet
0 comments:
Post a Comment