Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

தமிழகம்

அணையின் அணையா
பிரச்சினை.






தமிழகத்தில் டேம் 999 படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருட்டு சிடிக்கள் மூலம் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டம் தீட்டியுள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையை மையமாக வைத்து கேரளாவை சேர்ந்த திரைப்பட இயக்குனர் சோஹன்ராய் என்பவர் டேம் 999 என்னும் படத்தை எடுத்துள்ளார். அணை உடைந்து லட்சக்கணக்கான மக்கள் மடிவது போன்ற காட்சிகள் இப்படத்தில் உள்ளன. தமிழகம் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்று இப்படம் வெளியானது. தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பால் டேம் 999 படத்திற்கு தமிழக அரசு தடைவிதித்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. கேரள மாநிலத்தில் அனைவரையும் இப்படத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாதவர்களுக்கு இப்படத்தின் சிடிக்களை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளனர். இதற்காக லட்சக்கணக்கில் சிடி தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் சிலர் இதற்கு முறைமுக உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்படி என்னதான் எடுத்துள்ளார்கள் என்று பார்க்கும் ஆர்வம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தமிழகத்திலும் மெல்ல சிடிக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக திருட்டு சிடி கும்பலுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது.

கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் திருட்டு சிடி கும்பலும் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வெளிமாநிலங்களிலிருந்து டேம் 999 படத்தின் சிடிக்களை கொண்டு வந்து தங்களுக்கு உள்ள ரகசிய தொடர்புகள் மூலம் விற்பனைக்கு விட இந்த கும்பல் திட்டமிட்டுள்ளது என தெரிய வந்துள்ளது


0 comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips