Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

மாலைப் பொழுதின் மயக்கத்திலே


மாலைப் பொழுதின் மயக்கத்திலே
பகலவன் மறைந்தே பனி படறது பால்போலே,

பொழுதெல்லாம் இரை தேடி பொழுதோடு கூடு திரும்புது கொக்குகள்,

பசுங்கிளிகளும்,களவாடிய காக்கைகளும் ,
கதிரவன் முன்னே கருவேள் முள் கூட்டுக்கு திரும்பியாச்சு!

பொன்னொளி வீசியே
பொழுதெல்லாம் போச்சு,

கதிரவன் மறைந்து புதியதாய்
நிலா அவள் உதிக்கறாள்!இப்படியதோர் மாலைப் பொழுதிலே

மங்கையவள் மங்களாய் ஒளிகொண்ட
விளக்கதிலே திரி தீண்டுகிறாள்;

கழனி சென்ற களைப்புடனே தலைமேல் விறகோடு
இல்லம் சேர்ந்தாள் இல்லாள்;

பட்டணம் போன பன்னாடியைக்
காணலேன்னு வழி நோக்கி
காத்திருக்கும் மனைவிஒருத்தியவள்;

மண்சட்டியதிலே நெய்யும், கடுகும்
சேர்த்தே மணிக்குள் சோறாக்கி மணாளனுக்கும்,மகவுக்களுக்கும் பரிமாறும் தாயொருத்தி., .

மாட்டையும்,ஆட்டையும் கன்றுக்கு
பாலூட்டிவைத்து மிஞ்சியதை கறந்தே
இல்லம் வருகிறான் மறவனவன்!மாலையும் இராவும் இரண்டறக் கலந்தே மாலை மாண்டு இரவே வாகை சூடுது,

இவையெல்லாம் இனியதோர் கிராமத்து
மாலைப்பொழுதின் மயங்கும் பொன் நேரமது,







0 comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips