வீடும் வாசலும், மண்ணும் மக்களும்,ஊரும் உறவும் இழந்து,நெஞ்சில் துளி உயிரும்,சுவாசிக்க கொஞ்சம் காற்றும் தவிர கையிருப்பு எதுவும் இல்லாத தமிழ் ஈழத்து மக்களை
இலங்கை அரசு எப்படி நடத்துகின்றது என்பதைப் பற்றித்தான் இங்கு பதிவிடப்போகிறேன்.
நிராயுதபாணிகளான சொந்த தேசத்து மக்களை ஒரே இடத்தில் ,கொட்டடியில் போட்டு பூட்டிய கொடுமை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
இதை கொடுங்கோலன் ராஜபக்ஷே “பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான போர்” என்று காரணம் கூறியிருக்கிறான்.
அங்கு அடைக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு தராமலும்,காயத்திற்கு மருந்து
தராமலும்,சத்தமின்றி
ஒரு யுத்தம் நடந்திருக்கிறது.
அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களை வெளியில் விடுவித்தனர்,விட்டால் போதும் என்று வெளியேறிய தமிழர்கள்,அப்போது தங்களது சொந்த வீடுகளை இழந்திருந்தனர்.
விவசாய நிலங்கள் பிளாட் போடப்பட்டு விற்கப்பட்டிருந்தன.
மீன் பிடிக்க வலைகளும்,படகுகளும் சேதமாக்கப்பட்டிருந்தன.
இதற்கு ”முள்வேலி முகாமே நல்லதோ?” என்று நினைத்தார்கள் நம்மவர்கள்.
மேலும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களை கால்பதிக்கவே விடாமல் அலைக்கழித்தனர் இலங்கை அரசு அதிகாரிகள்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் நிருபர் ஒருவர் ,ஆளுங்கட்சி எம்.பி.அப்துல்
காதரிடம்
“இன்னும் தமிழர்களை ஏன் முள்வேலி முகாமுக்குள் அடைத்துவைத்திருக்கிறீர்கள்?”
என்று கேட்டதற்கு அவரின் பொறுப்பான பதில்”விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவே அப்படி செய்துள்ளோம்” என்று சொன்னாராம்.
(ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்).
பல நாட்களுக்கு முன் சோனியாகாந்தி சென்னைக்
கடற்கரையில் “இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல்
உரிமைகளை வழங்க வலியுறுத்துவோம்”என்று சொல்லியிருந்தது பற்றி ராஜபக்ஷேவின்
கைக்கூலியான லஷ்மண் யாப்பாவிடம் கேட்டதற்கு
“அப்படியா சோனியா சொன்னார்,எங்ககிட்ட சொல்லவே இல்ல” என்று வடிவேலு
மாதிரி காமெடி செய்திருக்கிறார் இந்த மதிகெட்ட அமைச்சர்.
இயற்கைக்கு முன் இவர்களும் பதில் சொல்லும் காலமும்
வரும்.
மேலும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களை போருக்குப் பின் இலங்கைக்குள்
அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள்.இதில் உலக சுகாதார நிறுவனமும்,ஐ.நா,சபையும்
அடக்கம்.
யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் தூதரகத்தை அமைத்துவிட்டதாக முன்னாள் முதல்வரான கருணாநிதிக்கு பெருமையாகக் கடிதம் எழுதினார் நம் வெளியுறவுத்துறை அமைச்சர் S.M.கிருஷ்ணா.
இதில் இப்போது என்ன செய்து கிழிக்க இலங்கை சென்றார் என்று தெரியவில்லை.
சுமார் 30 ஆண்டுகாலப் போராட்டம் ,
மரண நாள் கண்ட முதியவர்கள்,பிள்ளைகளையும்,கற்பையும் இழந்த பெண்கள்,உடல் வற்றி எலும்பும் தோலுமாய் மரணத்தை நோக்கிய பிஞ்சுக்குழந்தைகள்,,,,,
கனவுகள் சிதைக்கப்பட்ட இளம்பெண்கள் மட்டுமே தமிழரிடம் அவர்களுக்கு வேண்டுமாம்.
சிங்களக் கருக்களை சுமக்கும் தமிழ் தாரகைகள்,
ஈழக்கனவுகளை இப்படியும் சிதைக்கிறார்களாம்.
உலகிற்கு நாகரிகத்தை உணர்த்திய தமிழர்கள் நாதியற்று போகிறோம்!.
போதும், இழந்தது,இழப்பதற்கு இனி உயிரைத்தவிர ஒன்றுமில்லை தமிழரிடம்.
இனி யாருக்கு வேண்டும் நாடும், நாடு கடந்ததும்?