ஒரு நொடி விபத்து எத்தனை பேரின் எதிர்காலத்தை , நம்பிக்கையைச் சிதைத்து விடுகிறது.
இந்த 2012 அழிவின் ஆரம்பம் என்பதைப் பல நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
சில சம்பவங்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
நேற்று என்பதும்,நாளை என்பதும் பொய்.,
இன்று அதுவும் இந்த நொடி மட்டுமே உண்மை.
மரணம் என்பது மனிதப்பிறவி எனும் பாவத்தில் இருந்து விடுதலை அளிப்பது,
அந்த மரணத்தை இறைவன் இளவயதிலேயே கொடுப்பதால் ஒருவன் விரைவாக முக்தியடைகிறான்.
மலத்தையும்,சிறுநீரையும் வயித்திலே,எச்சிலையும்,வியர்வையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த பாவ கூட்டிலிருந்து உயிர் பிரிவது முக்தியடையும் செயல்.
மரணம்
.இயற்கையின் தயக்கமற்ற நியாயத் தீர்ப்பு !...'' . இதை யாரால் தான் தடுக்க முடியும்.
அவதூறாக அர்த்தம் கூறப்பட்டு
கற்பனைவாதிகளால்
அற்பமாக்கப்படும்
இயற்கையின்
வியத்தகு நியதி !
மரணம்!.
கடந்த 27-12-2011 அன்று நடந்த கோர விபத்தில்
தன்னுயிர் ஈந்த எங்கள் உடன்பிறவா சகோதரனும்
ஆருயிர் நண்பனுமாகிய
ப.பாலகணபதி
(அவரின் இரு சக்கர வாகனத்திற்கும் அவருக்கும் சேர்த்து அஞ்சலி )
ஐயப்ப (கன்னி)சாமியாகவே இறைவனிடம் சரணம் அடைந்துவிட்டார்.
அவர்களின் ஆன்மா முக்தியடைந்து விட்டதற்க்காகப் பிரார்த்திப்போம்!!
0 comments:
Post a Comment