ராகுல் ட்ராவிட் (THE GREAT WALL OF INDIAN CRICKET) ஓய்வு முடிவை இன்று
அறிவித்துவிட்டார்.ஏற்கனவே இவருடன் அறிமுகமான வெற்றிக் கேப்டனான ”தாதா” சவ்ரவ் கங்குலி
சதம் அடித்துவிட்டுத் தன் ஓய்வு முடிவை அறிவித்தார்.
இப்பொழுது ராகுல் ட்ராவிட்டும் தன் ஓய்வு பற்றி அறிவித்துவிட்டார்.
ஆட்ட்த்தில் வெற்றி தோல்வி வரும்,போகும்.ஆனால் சிறந்த வீரர்கள்
கிடைப்பது என்பது வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும்,.
”ஆஸ்த்ரேலியா தொடரில் சரியாக விளையாடவில்லை” என்று
ச்ச்சின்,ட்ராவிட்,லஷ்மண் ஆகிய 3 சீனியர் வீரர்கள் மீதுதான்
இந்திய மீடியாக்களின் குற்றச்சாட்டு.
ஏன் இந்த 3 பேர் மட்டும்தான் வீரர்களா? மற்ற வீரர்களுக்கு விளையாடுவதைத் தவிர
வேறென்ன வேலை?
ஏன் இதே சீனியர் வீரர்கள் பல முறை அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார்களே?
அப்போதெல்லாம் தலையில் வைத்துக் கொண்டாடிய இந்திய மீடியாக்கள்,
அவர்கள் சரியாக விளையாடாத நேரங்களில் அவர்களுக்கு ஆறுதல்,உற்சாகம்
தராவிடினும்,மன நெருக்கடி தராமலாவது இருக்க வேண்டும்.
”ஓய்வு பெற வேண்டும், ஓய்வு பெற வேண்டும்” என்று தொடர்ந்து செய்தி ஒளிபரப்பினார்கள்.
ஒருவரின் ஓய்வு முடிவு அந்த வீரரின் விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர,
மற்றவர்கள் நிர்பந்தம் செய்யக்கூடாது.
ராகுல் ட்ராவிட்டின் இந்த முடிவு அவரின் விருப்பம் இல்லை,.